Today Rasipalan 11th Apr 2023: சாதிக்க வாய்ப்பு கிடைக்கும்.. மிஸ் பண்ணிட்டு பின்னாடி ஃபீல் பண்ணாதீங்க

First Published | Apr 11, 2023, 5:30 AM IST

ஏப்ரல் 11ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.
 

மேஷம்:

அடுத்த சில நாட்களுக்கு வேலையில் அதிக கவனம் தேவை. உங்களை பற்றிய மற்றவர்களின் எதிர்மறையான நினைப்பு, உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும். சோர்வாக இருந்தால் பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் வேலையில் சமரசம் செய்யாதீர்கள். 
 


ரிஷபம்:

சோம்பேறித்தனத்தை தவிர்க்கவும். உத்யோகத்தில் இருக்கும் சிறிய பிரச்னைகளை தீர்க்க முயற்சிக்காதீர்கள். பணத்தால் பிரச்னை வரலாம். பார்ட்னர்கள் பிரச்னையை அவர்களே இணைந்து சரி செய்துகொள்வார்கள். 
 

Tap to resize

மிதுனம்:

உங்களது அண்மைக்கால தீவிர உழைப்புக்கு பாசிட்டிவான ரிசல்ட் கிடைக்கும். எந்த விஷயத்திலும் அவசரப்பட வேண்டாம். உங்கள் பார்ட்னர் சரிபார்க்கும் வரை எந்த முடிவும் எடுக்க வேண்டாம். 

கடகம்:

முக்கியமான பிரச்னைக்கு தீர்வு காண்பதன் மூலம் மன அழுத்தம் நீங்கும். உங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள். வேலையில் அர்ப்பணிப்புடன் செயல்படுங்கள்.  உணவு முறையில் கவனம் செலுத்தவும்.

சிம்மம்:

உங்கள் பிரச்னைகளை வெளிப்படையாக விவாதம் செய்யவும். உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை விவரிக்க முயற்சித்தால் பிரச்னை பெரிதாகும். வேலை ரீதியான முக்கியமான திறமையில் கவனம் செலுத்தவும். யாரிடமும் உதவி எதிர்பார்க்காதீர்கள். 
 

கன்னி:

உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வையுங்கள் உங்கள் கடமைகளை செவ்வனே செய்யுங்கள். சாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்த சமயத்தில் அந்த வாய்ப்பை ஏற்க தயங்குவீர்கள். 
 

துலாம்:

பழைய நினைவுகளால் மன அமைதி கெடும். உங்கள் திறமையின் மீது கவனம் செலுத்தவும். புதிய தொழில் தொடங்குவதற்காக லோன் எதுவும் வாங்காதீர்கள். 
 

விருச்சிகம்:

வேலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ஆரம்பத்தில் இந்த மாற்றங்கள் எதிர்மறையாக தோன்றலாம். ஆனால் உங்கள் இலக்கை அடைய இந்த மாற்றம் மிக முக்கியம். பழைய நண்பருடன் பேசுவீர்கள். வீட்டில் எழும் எதிர்ப்புகளால் கவலை அடைவீர்கள்.
 

தனுசு:

வேலையை வேகமாக முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். வேலையை சீரியஸாக எடுத்து செயல்படவும். பண விஷயங்களை கையாளும்போது நேர்மையாக இருப்பது முக்கியம். 

மகரம்:

பழைய விஷயங்களை மறந்துவிட்டு புதிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அனைவருமே உங்களுக்கு எதிராக இருப்பது போல் தோன்றும். ஆனால் அது உங்கள் எண்ணம் மட்டுமே. சூழலை ஆழமாக புரிந்துகொண்டு செயல்படுங்கள். உங்கள் தவறை நீங்களே திருத்திக்கொள்ளுங்கள்.
 

கும்பம்:

பிரச்னைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள். பொருளாதார மந்தநிலை ஏற்படும். ஆனால் கவலைப்பட தேவையில்லை. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
 

மீனம்:

உங்கள் தனிப்பட்ட வேலையை செய்ய முடியாத அளவிற்கு யாரும் அழுத்தம் போட்டால் அவர்களிடமிருந்து விலகியே இருங்கள். மீடியாவில் பணியாற்றுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்க இன்னும் கொஞ்ச காலமாகும். பார்ட்னர்களுடன் விரிசல் ஏற்படும்.
 

Latest Videos

click me!