வாஸ்துபடி சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்யக் கூடாத காரியங்கள்!!

First Published | May 8, 2023, 6:11 PM IST

Vastu Tips: வாஸ்து சாஸ்திரத்தின்படி, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சில காரியங்களை செய்யக் கூடாது. மீறி செய்தால் மோசமான விளைவுகள் ஏற்படுமாம். 

வாஸ்து சாஸ்திரம் மனித வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதில், மனித வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு சிறிய பிரச்சனையையும் தீர்க்க விதிகள், நடவடிக்கைகள் தரப்பட்டுள்ளன. வாஸ்துவை முறையாக கடைப்பிடிக்கவில்லை என்றால் நம் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படும். 

அந்த வகையில் சூரிய அஸ்தமனம் தொடர்பாக வாஸ்து சாஸ்திரத்தில் சில விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில காரியங்களை மாலையில் செய்வதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.  

யாராவது மாலையில் கீழே கொடுக்கப்பட்ட காரியங்களை செய்தால், அவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் வந்து தங்கும். அந்த செயல்களை செய்வதால், மகாலட்சுமி கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். 

Tap to resize

துணி துவைத்தல் 

வாஸ்து சாஸ்திரத்தின்படி, இரவில் துணி துவைப்பது முற்றிலும் தவறானது. இரவில் துணிகளை துவைத்து காய வைப்பதால் ஆடைகளுக்குள் எதிர்மறை ஆற்றல் நுழைகிறது. இந்த ஆடைகளை அணியும் போது அது எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதனால் ஒரு நபரின் மனம், ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவு ஏற்படும்.  

உணவில் கவனம் 

ஜோதிடம், வாஸ்து சாஸ்திரத்தின் படி, சூரிய அஸ்தமனத்திற்கு முன் உணவு உண்ண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள உணவை ஒருபோதும் மாலையில் திறந்து வைக்கக் கூடாது. இதனால் மகாலட்சுமி கோபம் கொள்ளலாம். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். 

இதையும் படிங்க: துளசியை இப்படி நட்டு வைத்தால் வீட்டில் செல்வம் குவியும்!

சுத்தப்படுத்துதல் 

வாஸ்து சாஸ்திரத்தின்படி, மாலையில் வீட்டை துடைப்பதில் தவறில்லை. ஆனால் மாலையில் கால்நடைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது. இதை செய்வதால் மகாலட்சுமி கோபத்திற்கு ஆளாகி நீங்கள் ஏழையாகலாம். 

குளியல் 

வாஸ்து சாஸ்திரத்தின்படி, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு குளிப்பதை தவிருங்கள். இவ்வாறு செய்வதால், மகாலட்சுமி கோபமடைந்து உங்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனால் அந்த நபர் வறுமையை சந்திப்பார் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: தங்க நகை வாங்கும் யோகம் வரணுமா? இந்த இடத்தில் கண்ணாடி வைங்க! பணம் உங்களை தேடி வரும் என்பது நிச்சயம்!

Latest Videos

click me!