தங்க நகை வாங்கும் யோகம் வரணுமா? இந்த இடத்தில் கண்ணாடி வைங்க! பணம் உங்களை தேடி வரும் என்பது நிச்சயம்!

First Published | May 8, 2023, 2:29 PM IST

சில தோஷம் இருந்தால் தங்கம் நம்மிடம் தங்காது. அதற்கென பரிகாரங்கள் செய்யும்போது தானாகவே தங்கம் வாங்கும் யோகம் நம்மை தேடி வரும். 

நம் வீட்டில் தங்கம் சேராமல் போக சில காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சொர்ண தோஷம். இந்த தோஷம் நீங்க முறையாக பரிகாரம் செய்யாவிட்டால், உங்களுடைய வீட்டில் தங்கம் நிலைக்காது. நீங்கள் எப்போது நகை வாங்கினாலும் தொலைந்து விடும் அல்லது அடகு கடைக்கு போகும் நிலை ஏற்படும். சொர்ண தோஷம் நீங்க என்ன மாதிரியான பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

நகைக்கடையில் நாம் வாங்கும் நகைகள் அதற்கு முன்பு யாருடையவையாக இருந்தன என்பது நமக்கு தெரியாது. ஒருவேளை அந்த நகைகள் இறந்தவர்களுடையதாகவோ, பணக்கஷ்டத்தில் மனம் வருந்தி விற்ற நகையாகவோ கூட இருக்கலாம். இந்த மாதிரி பிறரின் துயரில் கடைக்கு வந்த நகை, திருட்டு நகை, போன்றவற்றில் தோஷங்கள் இருக்கும். நமக்கு தெரியாத எத்தனையோ தோஷங்கள் கூட அதில் மறைந்திருக்கும். இந்த நகைகள் நம்முடைய வீட்டிற்கு வாங்கி வரும்போது வீட்டில் தங்காமல் போய்விடும். குடும்பத்திற்கும் பிரச்சனைகள் வரும். 

Tap to resize

தங்க நகை வாங்கும் யோகம் கை கூட பரிகாரம் 1: 

நாம் தங்கம் வாங்கியதும் வீட்டிற்கு வந்து உடனே அதை பீரோவில் வைக்கக்கூடாது. இந்த நகைகளை பன்னீர் கலந்த நீரில் சுத்தப்படுத்தி நன்கு துடைத்த பின்னர், மல்லிகை பூக்களால் நிரப்பிய ஒரு தட்டில் வைக்க வேண்டும். வீட்டு பூஜை அறையில் உள்ள செல்வத்தின் கடவுளான மகாலட்சுமி அல்லது பெருமாளின் திருவுருவப்படத்திற்கு முன்பு நகை இருக்கும் தட்டை வைத்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். மனதார இறைவனை வேண்டி கொண்ட பின் நகைகளை பயன்படுத்தினால் தங்கம் பெருகும் சொர்ண தோஷமும் நீங்கும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். 

பரிகாரம் 2: வீட்டில் உள்ள தங்க நகையை கிண்ணத்தில் வைத்து தண்ணீர் ஊற்றுங்கள். இதனுடன் தாமரை பூ, பன்னீர்ப் பூ, ஆவாரம் பூ ஆகிய பூக்களை வைக்க வேண்டும். இந்த தண்ணீரின் மேல் உங்கள் கைகளை வைத்து, சொர்ண தேவதையை மனதில் வேண்டிக் கொள்ளுங்கள். அப்போது வீட்டில் தங்கம் நிலைக்க வேண்டும் என மனதார பிரார்த்தியுங்கள். இதன் பிறகு நகைகளை பயன்படுத்தலாம். 

பணம் பெருக! 

பணத்தை வைத்திருக்கும் இடத்தில் கண்ணாடியை வைக்க மறக்காதீர்கள். சில வீடுகளில் பீரோவில் உள்ள லாக்கரில் தங்கள் பணத்தை வைத்திருப்பார்கள். அங்கு கண்ணாடி வைத்திருப்பது பணத்தை பெருக்கும். 

இதையும் படிங்க்: துளசியை இப்படி நட்டு வைத்தால் வீட்டில் செல்வம் குவியும்!

Latest Videos

click me!