இந்த 5 பொருள்ல ஒன்னு உங்க வீட்ல இருந்தாலும் வற்றாத பணம் இருக்கும்ங்கிறது ஐதீகம்!!

First Published | Jun 3, 2023, 5:07 PM IST

வீட்டில் சில பொருட்களை வைப்பதால் எப்போதும் குறையாத செல்வம் வீட்டில் பெருகி கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். அந்த பொருள்களை குறித்து இங்கு காணலாம். 

வாஸ்து சாஸ்திரம் வீடு கட்டுவதற்கு மட்டும் பயன்படுவது கிடையாது. வீட்டில் எதிர்மறை ஆற்றல் இல்லாமல் இருக்கவும், செல்வ செழிப்பு மிகுந்து காணப்படவும் வாஸ்து சாஸ்திரங்களில் பல விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவினால் மட்டுமே குடும்பத்தில் எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும். 

வீட்டில் செல்வம் பெருக, அமைதி நிலைக்க என வாஸ்து செடிகளை சிலர் வைப்பார்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை சரியான இடத்தில், சரியான திசையில் வைப்பதால் வாஸ்து பிரச்சனைகளை சரி செய்து வாஸ்து தோஷம் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் சில பொருட்களை வீட்டில் வைக்கும் போது அதிர்ஷ்டம் பெறுவோம். வீட்டில் பண வரவு அதிகரிக்கும். அப்படிப்பட்ட 5 பொருட்களை இங்கு காணலாம். 

Tap to resize

குபேரன் சிலை 

வீட்டிலும் தொழில் செய்யக் கூடிய இடங்களிலும் குபேரன் சிலை வைக்கலாம். இதனால் தொழிலில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். வீட்டில் வடக்கு திசை நோக்கி குபேரன் சிலையை வைக்க வேண்டும். பணம் மூட்டையுடன் காணப்படும் குபேரன் சிலை வாங்கி வைத்தால் அதிகமான நன்மைகள் கிடைக்கும். வீட்டில் குபேரன் சிலையை வைத்திருப்பதால் செல்வ செழிப்புடன் வாழ முடியும். 

புல்லாங்குழல் 

புல்லாங்குழலை இசைக்கருவியாக தான் பலருக்கும் தெரியும். ஆனால் வாஸ்துபடி புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பது வீட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது. வெறும் இசையை மட்டும் இன்றி வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் வல்லமை புல்லாங்குழலுக்கு உண்டு. உங்களுடைய பொருளாதார நெருக்கடி தீர வீட்டில் புல்லாங்குழலை வைக்க வேண்டும். இதனால் மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கும் புல்லாங்குழலை உங்களுடைய வீட்டு பூஜை அறையில் வாங்கி வைக்கலாம். 

நடன விநாயகர் 

விநாயகர் வினை தீர்ப்பவர். உங்களுடைய வீட்டில் பணக் கஷ்டம் ஏற்பட்டால் நாட்டிய கணபதி சிலையை வீட்டில் வாங்கி வைத்து விடுங்கள். அதன் பிறகு பணக்கஷ்டம் மொத்தமும் காணாமல் போகும் என்பது ஐதீகம். இந்த சிலையை வீட்டில் வாசலுக்கு நேராக இருப்பது போல் வைக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் சுபிட்சம் நிலவும். அதேபோல அமர்ந்த நிலையில் உள்ள விநாயகரை வீட்டில் வாங்கி வைப்பதும் நல்ல பயன்களைத் தரும். ஆனால் நாட்டிய கணபதி தான் செல்வத்தையும், இன்பத்தையும் குறிக்கும் அடையாளமாவார். முடிந்தவரை நாட்டிய கணபதி சிலையை வீட்டில் நிறுவுங்கள். 

சங்கு

எல்லா வாஸ்து தோஷங்களையும் நீக்கும் ஆற்றல் சங்குக்கு இருக்கிறது. உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி கையில் சங்கு வைத்திருப்பது போன்ற படங்கள் அல்லது சிலையை வைப்பதால் பொருளாதார கஷ்டங்கள் நீங்கும். வலம்புரி சங்கு உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. அதை வீட்டில் வைப்பதால் உங்களுடைய பொருளாதாரம் மேம்படும். 

இதையும் படிங்க: Vastu Tips: வீட்டுல செல்வம் குவியணுமா? வாழை மரம் இப்படி வச்சு பாருங்க!! உங்களுக்கான வாஸ்து டிப்ஸ்!!

ஒற்றைக்கண் தேங்காய் 

ஒற்றைக்கண் தேங்காயை சாதாரணமாக நினைக்காதீர்கள். அதில் அளவில்லாத சக்தி உண்டு. இந்த தேங்காவை உங்கள் வீட்டிற்கு முன்பு மஞ்சள் துணியில் வைத்து கட்டி தொங்கவிட்டு நாள்தோறும் பூஜை செய்தால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகும். பண வரவும் அதிகமாகும் உங்கள் வீட்டில் ஏதேனும் எதிர்மறை சக்திகள் இருந்தால் அவை விரைவில் விலகும். ஒற்றைக்கண் தேங்காய் உங்களுக்கு கிடைப்பது கடினமான விஷயம் என்றாலும், அப்படி கிடைக்கும் போது அதில் இவ்வாறு பூஜை செய்வது நல்ல பலன்கள் தரும். 

இதையும் படிங்க: குரு பெயர்ச்சி பலன்கள் 2023: இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம்!! பணத்துக்கு பஞ்சமே இருக்காது!!

Latest Videos

click me!