வைகாசி விசாகம் 2023 எப்போது ? முருகனின் பரிபூரண ஆசியை பெற எப்படி வழிபட வேண்டும்?

First Published | May 16, 2023, 10:42 AM IST

வைகாசி விசாகத்தன்று வழிபாடு செய்வதால் கல்வி, செல்வம் மேம்படும். இந்நாளில் தான் நீண்ட ஆயுளுக்காக எம பூஜை செய்வார்கள். 

முருகனுக்கு ஏற்ற விரத நாட்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வைகாசி விசாகம். எல்லா மாதங்களிலும் விசாக நட்சத்திரம் வந்தாலும் வைகாசியில் வரும் விசாகத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. ஏனென்றால் இந்த நாளில்தான் முருக பெருமான் அவதரித்ததாக நம்பப்படுகிறது. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அவதரித்ததால் தான் முருகனுக்கு, கந்தன் என்ற பெயரும் வந்தது. 

மயிலை தன்னுடைய வாகனமாக வைத்திருப்பவன் என்பதே விசாகன் என்பதற்கு அர்த்தமாகும். ஆகவே தான் வைகாசி விசாக நாளில் வேலும், மயிலும் வழிபட்டால் சிறப்பானதாகும். முருகன் 6 முனிவர்களின் சாபங்களை நீக்கியது வைகாசி விசாகம் நாளில் தான். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. இந்நாள் விரதம் சிறப்பு வாய்ந்தது. 

Tap to resize

வைகாசி விசாகம் 2023 எப்போது ? 

வைகாசியில் பெளர்ணமி திதி, விசாகம் நட்சத்திரம் சேர்ந்து வருகிறது. இந்த நாளை வைகாசி விசாகம் என்பார்கள். எல்லா ஆண்டுகளிலும் மே அல்லது ஜூன் ஆகிய மாதத்தில் தான் வரும். 2023ஆம் ஆண்டில் வைகாசி விசாகம், ஜூன் 2ஆம் தேதி காலை 05.55 மணிக்கு தொடங்கி, ஜூன் 03ஆன் தேதி காலை 05.54 மணி வரை விசாகம் நட்சத்திரம் காணப்படும். 

பூலோகத்தில் உள்ள நான்கு திசைகளிலும், சொர்க்கம் பாதாளம் ஆகியவற்றிலும் இருக்கும் அடியவர்களை பாதுகாக்க முருகன் ஆறு திருமுகங்களை கொண்டிருப்பதாக புராணங்கள் நமக்கு சொல்கின்றன. ஞானம், வைராக்கியம், செல்வம், கீர்த்தி, பலம், ஐஸ்வர்யம் போன்ற ஆறு பண்புகளை கொண்டது முருகனின் திருமுகங்கள். அவரை வணங்குவதால் இந்த குணங்கள் நமக்கு கிடைக்கும். முருகனின் அருளை வேண்டுவோர் இந்நாளில் பால்குடம், காவடி எடுத்து எடுத்து வழிபடுவார்கள். 

இதையும் படிங்க: கெட்ட நேரம் கூட நல்ல நேரமா மாறும்! 1 வெற்றிலை, நெய் தீபம் வைத்து நம்பிக்கையோடு நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

வேண்டுதல்கள் 

குழந்தை பாக்கியம், உடல்நலம், குடும்ப ஒற்றுமை கிடைக்க வைகாசி விசாகத்தில் முருகனின் திருபாதத்தில் சரணடையலாம். அன்றைய நாளில் முருகனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் படைக்கலாம். கோடைகாலம் என்பதால் நீர்மோர், பானகம் போன்றவையும் முருகனுக்கு நைவேத்தியமாக படைத்து வைக்கலாம். பிறருக்கும் தானமாக வழங்கலாம். இதன் மூலம் முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெற்று கொள்ளலாம். 

இதையும் படிங்க: ராகு-கேது பெயர்ச்சி 2023 : இந்த 5 ராசிகளுக்கு நல்ல நேரம்.. வீட்டில் பண மழை கொட்டி தீர்க்கும்!

Latest Videos

click me!