சில பரிகாரங்களை நாம் வாரம்தோறும், மாதம்தோறும் என தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்த பரிகாரத்தை ஒரே ஒரு தடவை செய்தால் கூட நல்ல பலன் கிடைக்கும். நாம் புலம்பும் கெட்ட நேரங்கள் கூட விலகி, மகிழும் நல்ல நேரம் தொடங்கிவிடும்.
வெற்றிலை பரிகாரம்
இந்த பரிகாரத்தை செய்வதற்கு எந்த சேதமும் இல்லாத நல்ல வெற்றிலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வெற்றிலையில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றையும், ஒரு ஏலக்காய், ஒரு விரலி மஞ்சள் ஆகியவற்றையும் வைத்து நூலால் வெற்றிலை கிழியாமல் கட்டிக் கொள்ளுங்கள். இதனை உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் அல்லது உங்களுக்கு நன்கு தெரிந்த இடத்தில் வெகுகாலமாக பூஜைகள் செய்யப்படும் மரத்தில் கொண்டு வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அரச மரத்தடியில் விநாயகருக்கு காலம் காலமாக பூஜை செய்வதை பார்த்திருப்பீர்கள். அது மாதிரியான மரங்களில் நூலால் கட்டிய அந்த வெற்றிலையை சமர்ப்பிக்க வேண்டும்.