சனிக்குப் பிறகு மனதில் பயத்தை உண்டாக்கும் கிரகங்களின் பெயர் ராகுவும், கேதுவும் தான். இந்த இரண்டு கிரகங்களும் ஜோதிட சாஸ்திரத்தில் எந்த ராசியாலும் ஆளப்படவில்லை. எந்தெந்த கிரகங்கள் அவற்றுடன் அமைந்தாலும் அதற்கேற்ப பலன்களைத் தருகின்றன. ராகு மற்றும் கேது வருடத்திற்கு ஒரு முறை ராசி மாறுகிறார்கள். இந்த இரண்டு கிரகங்களும் இந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ராசியை மாற்றும். ஜோதிட சாஸ்திரப்படி ராகு-கேது தோஷம் மட்டுமின்றி நல்ல பலனையும் தரும். தற்போது ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர். ஜோதிட ரீதியாக, ராகு-கேது பெயர்ச்சியின் செல்வாக்கின் கீழ் 5 ராசிகளுக்கு, அடுத்த ஐந்தரை மாதங்கள் ரொம்பவும் பயனுள்ளது. இது நன்மைகள் பெருகும் காலம். அந்த ராசிகளை இங்கு காணலாம்.