வாஸ்து டிப்ஸ்
நீங்கள் வீட்டில் வேலை செய்தாலும் அல்லது அலுவலகத்தில் வேலை செய்தாலும் நுழைவாயிலுக்கு நேராக முதுகை காட்டி அமர்வதை தவிர்ப்பது நல்லது. இப்படி, நுழைவாயிலுக்கு முதுகை காட்டி அமர்வதால் உங்களுக்கு கிடைக்கும் வெற்றியில் தடை ஏற்படலாம்.
உங்கள் வீட்டில் உள்ள தென்மேற்கு மூலை தான் உங்களுடைய விருப்பங்கள் உறவுகளுடன் தொடர்பை கொண்டுள்ளது. இந்த மூலையில் செடிகள் வைத்து பராமரித்தால் நேர்மறை ஆற்றலில் மோசமான விளைவுகள் ஏற்படும். அதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் வரலாம். பிரச்சனைகள் உண்டாகலாம். இந்த மூலையில் வீட்டு தோட்டம் வைத்து பராமரித்தால் அதை தவிருங்கள்.