பணக்கஷ்டமே வராது! ரோஜா மலர்களால்.. லட்சுமிக்கு இந்த பூஜை செய்யுங்க! கைநழுவி சென்ற பணம் கூட வந்து சேரும்!!

First Published | May 13, 2023, 5:28 PM IST

நிதி நிலையில் மேம்பாடு அடைய சில வாஸ்து விதிகளை பின்பற்றினால் போதும். பணக்கஷ்டமே வராது. 

வாழ்க்கையில் முன்னேற வாஸ்து விதிகள் அவசியம். அதை ஒருவர் புறக்கணித்தால் அவருக்கு பொருளாதாரத் தடைகள் வரலாம். வாஸ்து தோஷம் ஒரு நபரின் வாழ்க்கையில் விசித்திரமான சூழலை ஏற்படுத்துகிறது. அவரால் அந்த சிக்கலில் இருந்து மீளவே முடியாது. வாஸ்து சாஸ்திரத்தில், பணக்கஷ்டத்தை சமாளிக்க பல நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறலாம். உங்களுடைய செல்வமும் பெருகும். 

உங்களுக்கு நிதி பிரச்சனை அதிகம் இருந்தால், வெள்ளிக்கிழமை அன்று வேப்ப மரத்தை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். அதை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவி ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வைத்து விடுங்கள். இந்த கண்ணாடி பாத்திரத்தில் உப்பு, தண்ணீர் ஆகியவற்றை நிரப்பவும். இவ்வாறு செய்வதால் நிதி பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம். 

Tap to resize

செல்வத்தின் கடவுளான மகாலட்சுமிக்கு சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும். இதற்காக வெள்ளிக்கிழமை லட்சுமிக்கு சிவப்பு ரோஜா மாலை சாற்றுங்கள். லட்சுமி தேவியை முறையாக வழிபாடு செய்யுங்கள். தாமரை மலர்களையும், வெள்ளை இனிப்புகளையும் படைத்து மகாலட்சுமியை மனங்குளிர செய்யலாம். 

இதையும் படிங்க: கழிப்பறையில் பின்பற்ற வேண்டிய விதிகள்.. ஒருபோதும் இந்த தவறை.. இந்து சாஸ்திரங்கள் சொல்வது என்ன?

மகா லட்சுமிக்கு இன்னொரு விஷயம் பிடிக்கும். அது உங்களுக்கு தெரியுமா? தினமும் வாசனை திரவியம் போட்டபடி, அலுவலகம் செல்வதால் மகாலட்சுமி மகிழ்வாள். அலுவலகத்தில் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் லட்சுமியின் மங்களகரமான படத்தை வையுங்கள். இது எல்லாவற்றையும் சிறப்பாக மாற்றும். 

வியாபாரத்தில் வெற்றி பெற வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் லட்சுமிக்கு சிவப்பு ரோஜாக்களை அர்ப்பணிக்கவும். அவருக்கு சிவப்பு ரோஜாவை அர்ப்பணிப்பதன் மூலம், உங்கள் விருப்பங்கள் விரைவில் நிறைவேறும். 

பணப்பற்றாக்குறையால் அவதிப்பட்டு, அதிலிருந்து விடுபட விரும்பினால், சுக்ல பக்ஷத்தில் சந்திரனுக்குப் பால் அர்ச்சனை செய்யுங்கள். இப்படிச் செய்தால், இழுபறியான பணத்தைக் கூட திரும்பப் பெறுவீர்கள். பணப் பிரச்சனை முற்றிலும் தீரும். 

இதையும் படிங்க: சாமி பிரசாதம் வாங்கிய பிறகு இதை மட்டும் செய்து பாருங்கள்.. எவ்வளவு பலன்கள் தெரியுமா?

Latest Videos

click me!