தமிழ் வருடப் பிறப்பு நாளில் 'இப்படி' செய்தால் வீட்டில் பணம் அள்ள அள்ள குறையாது!! 

Published : Apr 11, 2025, 03:46 PM ISTUpdated : Apr 11, 2025, 03:51 PM IST

தமிழ் வருடப் பிறப்பு நாளில் எப்படி வழிபாடு செய்தால் ஆண்டு முழுக்கவும் வீட்டில் பணம் தங்கும் என்பதை இந்தப் பதிவில் காணலாம். 

PREV
16
தமிழ் வருடப் பிறப்பு நாளில் 'இப்படி' செய்தால் வீட்டில் பணம் அள்ள அள்ள குறையாது!! 

Tamil New Year 2025 Worship For Money : தமிழ் வருடப் பிறப்பு தமிழ் மாதமான சித்திரை முதல் நாளில் தான் கொண்டாடப்படும். சித்திரை மாதத்தில் தான் சூரிய பகவான் தன்னுடைய ஓராண்டு பயணத்தை முடித்து புதிய பயணத்தை தொடங்குவார் என்பது ஐதீகம். அதாவது சூரிய பகவான் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளிலும் தன்னுடைய பயணத்தை முடிப்பதையே ஓராண்டு என்கிறார்கள். இந்நாளில் மேலும் பல சிறப்புகள் உள்ளன. 

26
Tamil New Year 2025

வழிபாடு: 

சித்திரை முதல் நாளன்று தான் பிரம்ம தேவர் மண்ணுலகில் உயிரினங்களை படைத்ததாகவும் சொல்லப்படுகிறது. தென்னிந்தியாவில் சித்திரை முதல் நாளானது தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரை பிறப்பு, சித்திரைக் கனி, சங்கராந்தி உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. இந்த நாளில் எப்படி வழிபாடு செய்து இறைவனை வேண்டினால் பணம் பெருகும், வீட்டில் நிம்மதி நிலைக்கும் என இந்தப் பதிவில் காணலாம். 

36
Tamil New Year 2025

முன்னோர் வழி: 

தமிழர்கள் பாரம்பரியத்தை பின்பற்றுபவர்கள். தமிழ் வருடப் பிறப்பை கொண்டாடவும் சில வழிமுறைகள் உள்ளன. தமிழ் வருடப் பிறப்பு நாளுக்கு முந்தைய தினம் வழிபாட்டுக்கு தேவையானதை செய்துவிட வேண்டும். அதன் முதல்படியாக வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை நன்கு துடைத்து சுத்தப்படுத்த வேண்டும்.  

46
Tamil New Year 2025

முக்கனிகள்: 

முந்தைய தினத்தின் இரவில்  ஒரு தட்டில் முக்கனிகளான மா, பலா, வாழை போன்றவற்றை எடுத்து வையுங்கள். தவறாமல் இவை வழிபாட்டில் வைக்கப்பட வேண்டும். இதனுடன் வேறு பழங்களையும் வைக்கலாம். இவற்றுடன் 1 எலுமிச்சை பழம், வெற்றிலை, பாக்கு போன்றவை வைக்கலாம். வீட்டில் உள்ள  தங்க நகைகளில் ஏதேனும் ஒன்றை தட்டில் வைத்தால் கூட போதுமானது. அது ஒரு குண்டுமணி தங்கமாக இருந்தாலும் சரி வைக்க வேண்டும். 

இதையும் படிங்க:  விசுவாவசு தமிழ் புத்தாண்டு பலன்: இந்த ராசிகளுக்கு காசு, பணம் கொட்டப் போகிறது!!

56
Tamil New Year 2025

பணம்! பணம்! 

உங்களுடைய வீட்டில் ரூபாய் நோட்டு கட்டு வைத்திருந்தால் அதையும் தட்டில் வைக்கலாம். இல்லாவிட்டால் சில்லறை காசுகளை வைத்து வழிபடலாம். இதையெல்லாம் வைத்துவிட்டு அதற்கு முன்பாக கண்ணாடியை வையுங்கள். தமிழ் வருடப் பிறப்பு நாளில் காலையில் எழுந்ததுமே வீட்டில் உள்ள எல்லோருமே தட்டில் இருக்கும்  பழங்கள், பணம், நகை போன்றவற்றை தான் கண் குளிர காண வேண்டும். 

இதையும் படிங்க:   ஆமை சிலையை வீட்டில் இப்படி வைங்க; அள்ள அள்ள குறையாமல் பணம் பெருகும்!

66
Tamil New Year 2025

மகாலட்சுமி அருள்!! 

பழங்கள், நகை, பணம் ஆகியவற்றை பார்த்தப் பின் கண்ணாடியில் அவரவருடைய முகத்தை மகாலட்சுமியை மனதில் நினைத்துக் கொண்டே பாருங்கள். பின்னர் அன்றைய நாளை தொடங்கலாம். இப்படி வருடத்தின் முதல் நாளில் செல்வத்தையும், மகாலட்சுமியையும் தேடுவதால் அந்த ஆண்டு முழுக்கவே பணம் பெருகும். இதை நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories