ஆமை சிலையை வீட்டில் இப்படி வைங்க; அள்ள அள்ள குறையாமல் பணம் பெருகும்!
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் ஆமை சிலையை எப்படி வைத்தால் பணம் பெருகும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் ஆமை சிலையை எப்படி வைத்தால் பணம் பெருகும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Where to Place Tortoise Statue to Attract Wealth and Prosperity : இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என தனி சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில், வாஸ்து சாஸ்திரத்தின் படி ஆமை இந்து மதத்தில் புனிதமாக கருதப்படுகிறது.. அதாவது இந்து மதத்தின் படி ஆமை மங்களகரமானதாகவும், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை தருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ஆமை வடிவில் விஷ்ணு அவதரித்ததாக புராணங்கள் சொல்லுகின்றன.
ஆமை விஷ்ணுவின் கூர்ம அவதாரம் என்றும் அழைக்கப்படுகின்றது. பாற்கடலை கடந்த போது விஷ்ணு ஆமை வடிவத்தை அவதாரமாக எடுத்து, மந்தராஞ்சல் மலையை தனது ஓட்டில் தாங்கியதாக புராணங்கள் சொல்லுகின்றன. எனவே, உங்களது வீட்டிலும், அலுவலகத்திலும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அதிகரிக்க, ஆமை சிலையை வைத்திருப்பது மிகவும் மங்களகரமானது என்று கூறப்படுகிறது. சரி, இப்போது வாஸ்து சாஸ்திரத்தின் படி பணம் பெறுக வீட்டில் ஆமை சிலையை எங்கு, எப்படி வைக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிடம் படி, வீட்டில் ஆமை சிலை வைத்திருப்பது பல நன்மைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது இதனால் சமீப காலமாகவே பலர் தங்களது வீடுகளில் ஆமை சிலைகளை வைத்திருக்கின்றனர். இருப்பினும் வீட்டில் எந்த திசையில் அதை வைத்தால், என்ன பலன் கிடைக்கும் என்பதை துல்லியமாக அறிந்து கொள்வது முக்கியம் என்று வாஸ்து நிபுணர்கள் சொல்லுகின்றனர் .
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் ஆமை சிலை வைக்க சரியான திசை வடக்கு திசை தான். இந்த திசையில் வைத்தால் பல நன்மைகள் கிடைப்பது மட்டுமின்றி, வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் ஈர்க்கப்படும், எதிர்மறை ஆற்றல் நீங்கும். ஃபெங் சுய் படி, ஆமை ஞானம், பொறுமை மற்றும் நீண்ட ஆயுளை குறிக்கின்றது.
இதையும் படிங்க: யானை சிலையை வீட்டின் இந்த திசையில் வையுங்கள்; பணமழை பொழியும்...உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்..!
வாஸ்துபடி உங்கள் வீட்டின் பூஜையறையில் ஆமை சிலையை தண்ணீரால் நிரப்பப்பட்ட பித்தளை பாத்திரத்தில் வைக்கலாம். ஆமை சிலை வைக்க முடியாவிட்டால் ஆமையின் படத்தை கூட வைக்கலாம்.
இதையும் படிங்க: சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் எங்கு வைக்கலாம்?
வீட்டில் ஆமை சிலையை வடக்கிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆமை சிலையை தண்ணீரை நிரப்பப்பட்ட பாத்திரத்தில் தான் வைக்க வேண்டும். ஆமை சிலையின் மீது தினமும் ஒரு துளசி இலையை வைக்க வேண்டும். வேலைக்காக வெளியே செல்லும் போது ஆமையை கண்டால் உங்கள் வேலை வெற்றி பெறும் என்று சொல்லப்படுகிறது. ஆமை நேர்மறை ஆற்றலை தருவது மட்டுமல்லாமல், பணத்தையும் பெறுக செய்யும்.
உலக ஆமை சிலையை வடக்க அல்லது வடமேற்கு திசையில் வைக்கலாமென்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். வடக்கில் வைத்தால் குழந்தைகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அதுவே வடமேற்கு திசையில் வைத்தால் முழு மனதுடன் படிப்பில் கவனம் செலுத்த உதவுகிறது.