திருமணமான பின் மகளுக்கு இந்த '3' பொருட்களை கொடுக்காதீங்க!! அது அசுபம்!!

Published : Mar 29, 2025, 08:08 PM IST

உங்களது திருமணமான மகள் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால் வாசசாஸ்திரத்தின்படி இந்த மூன்று பொருட்களை பரிசாக கொடுக்க வேண்டாம். அது அசுபமாக கருதப்படுகிறது.

PREV
14
திருமணமான பின் மகளுக்கு இந்த '3' பொருட்களை கொடுக்காதீங்க!! அது அசுபம்!!

These 3 Things Not Be Gifted Your Married Daughter As Per Vastu : திருமணமான மகளுக்கு பரிசு கொடுப்பது ஒரு பொதுவான பாரம்பரியம். ஆனால், அப்படி உங்களது மகளுக்கு நீங்கள் பரிசு கொடுக்கும் முன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அதாவது வாஸ்து மற்றும் ஜோதிடத்தின்படி, சில பொருட்கள் உங்களது திருமணமான மகளுக்கு கொடுப்பது உறவுகளில் விரிசல் நிதி பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி, திருமணமான உங்களது மகளுக்கு கொடுக்கக்கூடிய பரிசுகள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

24
கருப்பு உடைகள்:

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கருப்பு நிறம் எதிர்மறை சக்தியை ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு உங்களது மகளுக்கு கருப்பு உடைகளை பரிசாக கொடுப்பது அவளுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. முக்கியமாக இது கணவன் மனைவி இடையேயான உறவு தூரத்தை அதிகரிக்க செய்யும் மற்றும் குடும்ப உறவுகளை பலவீனப்படுத்தும். எனவே, திருமணமான உங்களது மகளுக்கு ஒருபோதும் கருப்பு நிற ஆடைகளை பரிசாக கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக வெளிர் மற்றும் மங்கலான நேரத்தில் இருக்கும் ஆடைகளை பரிசாக கொடுக்கலாம்.

இதையும் படிங்க:  Vastu Tips : வாஸ்துபடி 'இத' உடனே செய்யுங்க.. திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும்!!

34
கண்ணாடி பொருட்கள்:

திருமணமான மகளுக்கு கண்ணாடி பொருட்களை பரிசாக கொடுப்பது அவளுடைய வாழ்க்கையில் நிதி பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. ஏனெனில் கண்ணாடி பலவீனம் மற்றும் உறுதியற்ற தன்மையின் அடையாளமாக கருதப்படுகிறது. மேலும் இது வாழ்க்கையில் ஏற்படுத்தும் என்பதை குறிக்கிறது. இது தவிர கண்ணாடி பொருட்கள் உடைந்து போய்விடும். இதனால் நிதி பிரச்சனைகள் மற்றும் உறவுகளில் விரிசல்கள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க:  கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கு இந்த வாஸ்து தோஷமே! உடனே சரி செய்ங்க.!

44
ஊறுகாய்:

ஊறுகாய் காரமாகவும், புளிப்பாகவும் இருப்பதால் அவற்றை உங்களது மகளுக்கு கொடுப்பது உறவுகளில் புளிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே திருமணமான உங்களது மகளுக்கு ஊறுகாய் பரிசளித்தால் அது அவருடைய திருமண வாழ்க்கையில் பதட்டத்தை அதிகரிக்கும். மத நம்பிக்கைகளின் படி, ஊறுகாய் கொடுப்பது மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையே கருத்து வேறுபாட்டிற்கு வழிவகுக்கும். எனவே உங்களது மகளுக்கு ஒருபோதும் ஊறுகாய் கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக நீங்கள் பொருட்கள் கொடுப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது உறவுகளில் இனிமையை ஏற்படுத்தும்.

Read more Photos on
click me!

Recommended Stories