வாழ்க்கையில் அடுதடுத்து அடியா? பிரச்சனைகள் நீங்கி பிரகாசமாக இந்த '1' பரிகாரம் போதும்!
உங்களது சிக்கலான வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பால் நிறைந்திருக்க செய்ய வேண்டிய சில எளிய வாஸ்து பரிகாரங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
உங்களது சிக்கலான வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பால் நிறைந்திருக்க செய்ய வேண்டிய சில எளிய வாஸ்து பரிகாரங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
Vastu Tips For Completely Change Your Complicated Life ; இந்து மத மக்களின் வாழ்வில் வாசு சாஸ்திரம் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. அவர்களது வாழ்க்கையில் எந்தவித பிரச்சனையும் தவிர்க்க விரும்பினாலோ அல்லது எந்த ஒரு வேலையையும் செய்வதற்கு முன்போ, செய்யும்போதோ வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்கள் தங்களது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்ற விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றை நீங்கள் பின்பற்றினால் உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிலவும். அதுமட்டுமில்லாமல் அவை உங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் உங்களுக்கு நிறைய நன்மைகளை. என்னை என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி நீங்கள் தூங்கும் அறையில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அது எதிர்மறை சக்தியை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. அதுபோல வாஸ்துவில் தென்மேற்கு திசை நிலைத்தன்மை மற்றும் வலிமையுடன் தொடர்புடையதால், இந்த திசையில் உங்கள் படுக்கையை வைப்பது உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மையை ஊக்குவிக்கும். மேலும் உங்கள் படுக்கையின் தென்கிழக்கு மூலையில் தண்ணீர் வைப்பதை தவிர்க்கவும். இல்லையெனில் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பூக்கள் மற்றும் செடிகள் வீட்டில் இருந்தால் அது நேர்மறை கொண்டுவரும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. மேலும் இது கார்த்தி சுத்திகரிக்கும் மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும். எனவே உங்களது வீட்டில் வேப்பமரம், துளசி செடி போன்றவற்றை வைத்திருக்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி தளபாடங்கள் மிகவும் முக்கியமானது. இது சுதந்திரமாக நகரும் வகையிலும், ஆற்றல் உள்ளேயும், வெளியேயும் பாயும் வகையில் அமைக்கப்பட வேண்டும். மேலும் அறையின் நடுவில் தளபாடங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் இல்லையெனில் அது நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தை தடுக்கும். அதுபோல தளபாடங்களை சுவர்களுக்கு எதிராக வையுங்கள். இடையில் ஒருபோதும் வைக்க வேண்டாம். உங்கள் குடும்ப பிணைப்பை வலுப்படுத்த நீங்கள் விரும்பினால், உங்களது அறை சுவரில் ஒரு குடும்ப புகைப்படத்தை மாட்டி வைக்கலாம்.
இதையும் படிங்க: வழிபாட்டில் தீபம் ஏற்றும் போது தெரியாம கூட இந்த தவறை செய்யாதீங்க!
படிகங்கள் மற்றும் ரத்தின கற்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. உதரணமாக, செல்வந்திக்கல் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதாக நம்பிக்கை. மேலும் அதை வடகிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: தினமும் காலைல இந்த 4 விஷயங்களை செய்ங்க! வீட்டில் பண மழை தான்!!
உங்கள் வீட்டின் குளியலறை மற்றும் கழிப்பறை வாஸ்து சாஸ்திரத்தின் படி இருக்க வேண்டும். எனது குளியலறைக்கு வெளிர் வண்ணங்களை அடிக்கலாம். ஏனெனில் அவை நேர்மறை ஆற்றலை கொண்டு வந்து சூழலை அமைதியாக வைத்திருக்கும். கழிப்பறை இருக்கை வடக்கு அல்லது தெற்கு நோக்கி தான் இருக்க வேண்டும். இதனால் குடும்ப உறுப்பினர்களின் ஆசிர்வாதம் சமநிலையில் வைக்கப்படும். கழிவறிய பயன்படுத்திய பிறகு எப்போதுமே அதை மூடி வைக்க வேண்டும். மேலும் குளியலறையின் கதவை மூடி வைக்க வேண்டும். இதனால் அதிலிருந்து எந்தவிதமான எதிர்சக்தியும் வராது. குளியலறை கதவின் பின்னால் ஒரு கண்ணாடியை வைத்தால் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.