யுகாதி 2025 எப்போது? அதை கொண்டாட என்ன காரணம் தெரியுமா?
இந்த 2025ம் ஆண்டில் யுகாதி பண்டிகை எப்போது வருகிறது. அது எதற்காக கொண்டாடப்படுகிறது? எப்படி கொண்டாட வேண்டும்? மற்றும் அதன் சிறப்புகள் என்ன என்பதை குறித்து இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.
இந்த 2025ம் ஆண்டில் யுகாதி பண்டிகை எப்போது வருகிறது. அது எதற்காக கொண்டாடப்படுகிறது? எப்படி கொண்டாட வேண்டும்? மற்றும் அதன் சிறப்புகள் என்ன என்பதை குறித்து இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.
Ugadi 2025 Date and Time : யுகாதி பண்டிகை என்பது தென்னிந்தியாவில் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பண்டிகை ஆனது தெலுங்கு மொழி பேசும் மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதாவது தெலுங்கு புத்தாண்டின் துவக்க நாளை தான் யுகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
மகிழ்ச்சி மற்றும் புதுப்பித்தலின் காலத்தை குறிக்கும் ஒரு பண்டிகை இதுவாகும். மேலும் ஒருவரது நேர்மறையான மனநிலை நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் புதிய தொடக்கங்களை தழுவ ஊக்குவிக்கும் நாளாக கருதப்படுகிறது. இதனால்தான் பலர் இந்நாளில் புதிய தொழில் தொடங்குவது புதிய சொத்துக்கள் வாங்குவது ஆகியவற்றை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வழிபாட்டில் தீபம் ஏற்றும் போது தெரியாம கூட இந்த தவறை செய்யாதீங்க!
2025 ஆம் ஆண்டு யுகாதி பண்டிகையானது மார்ச் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. பிரதிபத திதியானது மார்ச் 29ஆம் தேதி மாலை 4.27 மணிக்கு தொடங்கி மார்ச் 30ஆம் தேதி மதியம் 12.49 மணிக்கு முடிவடையும்.
இதையும் படிங்க: சூரியன் புதன் சேர்க்கை – 3 ராசிகளுக்கு ஜாக்பாட்; வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்!
யுகாதி பண்டிகை நாளன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து கடவுளை வழிபட வேண்டும். பிறகு யுகாதி சிறப்பு உணவுகளான உகாதி பச்சடியுடன் பலவிதமான உணவுகள் செய்து யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாளில் பஞ்சாங்கம் படிப்பது மிகவும் சிறப்பாகவும் இதனால் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.
யுகாதி பண்டிகை என்று பிரம்ம முகூர்த்த வேளையில் சூரிய உதயத்திற்கு முன்பாக வீட்டின் பூஜையறையில் ஐந்து தீபங்கள் ஏற்ற வேண்டும். மேலும் மஞ்சள் அல்லது சாணத்தால் விநாயகர் செய்து விநாயகருக்கு அருகம்புல் மற்றும் நெய்வேத்தியம் செய்து தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். இப்படி வழிபாடு செய்தால் உங்களது வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெறுவீர்கள் என்பது ஐதீகம்.