தினமும் காலைல இந்த 4 விஷயங்களை செய்ங்க! வீட்டில் பண மழை தான்!!
காலை நேரம் ரொம்பவே முக்கியமானது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான முறையில் நாளைத் தொடங்கினால், உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி பெருகும்.
காலை நேரம் ரொம்பவே முக்கியமானது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான முறையில் நாளைத் தொடங்கினால், உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி பெருகும்.
Morning Vastu Tips To Attract Wealth And Prosperity : ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் செல்வ பற்றாக் குறையை தவிர்க்க பல முக்கியமான பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்களது வீட்டில் பணப் பற்றாக்குறைய ஒருபோதும் இருக்கவே கூடாது என்றும்,ச் உங்களது வாழ்க்கையில் செழிப்பு நிலைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் வாஸ்து சாஸ்திரத்தின் படி காலையில் எழுந்தவுடன் சில குறிப்புகளை பின்பற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, லட்சுமி தேவியை மகிழ்விக்க கூடிய ஐந்து முக்கியமான காலை வாஸ்து குறிப்புகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, சூரிய உதயத்திற்கு முன் எழுந்து நாளைய தொடங்குவது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வரும். சூரிய உதயத்தின் போது வளிமண்டலத்தில் புத்துணர்ச்சி மற்றும் நேர்மறை இருக்கும்.இது உங்களது நாளை மிகவும் மங்களகரமானதாக மாற்றும். அதிகாலையில் எழுந்து வேலையை தொடங்கினால் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், செழிப்பையும் தரும்.
காலையில் எழுந்தவுடன் முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு பிறகு கடவுளை தியானிக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பாயும் மற்றும் மனம் அமைதியாக இருக்கும். மேலும் உங்களது மன ஆரோக்கியத்தையும் நன்றாக வைத்திருகும். இதனால் அன்றைய சவால்களை சுலபமாக எதிர்கொள்வீர்கள்.
இதையும் படிங்க: கவலைகள் நீங்க கற்பூரம் ஏற்றும் பரிகாரம்! ஒரு கற்பூரம் வாழ்வையே மாற்றும்
வாஸ்து சாஸ்திரத்தின் படி தூங்கி எழுந்தவுடன் படுக்கையை ஒழுங்குபடுத்துவதும் முக்கியமானதாக கருதப்படுகிறது. காலை எழுந்தவுடன் உங்களது படுக்கையை ஒழுங்கு படுத்தினால் உங்களது அறை சுத்தமாகவும் ,ஒழுங்காகவும் இருப்பது மட்டுமல்லாமல், உங்களது வாழ்க்கையும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நேர்மறையான முறையில் வாழ்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.
இதையும் படிங்க: காலை எழுந்ததும் பார்க்கக் கூடாத 4 விஷயங்கள்; பண பற்றாக்குறை வரும்
காலை தூங்கி எழுந்தவுடன் வீட்டின் பிரதான நுழைவாயிலே சுத்தம் செய்ய வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் பிரதான நுழைவாயில் வழியாக தான் நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைகிறது. எனவே அதை சுத்தமாகவும், சரியான திசையிலும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இது தவிர வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் எந்த அழுக்கும் இருக்கக் கூடாது. இது எதிர்மறைக்கு வழி வகுக்கும்.
காலையில் எழுந்தவுடன் வீட்டின் எல்லா ஜன்னல்களையும், கதவுகளையும் திறந்து வைத்து புதிய காற்று மற்றும் சூரிய ஒளி வீட்டிற்குள் வரவேண்டும். இது வீட்டிற்கு புத்துணர்ச்சியையும், நேர்மறையையும் கொண்டு வருவது மட்டுமல்லாமல், வீட்டில் நல்ல ஆற்றலையும் பரப்பும். நல்ல விளக்குகள் மற்றும் காற்று ஏற்பாடுகள் வீட்டில் நேர்மறையான தாக்கத்தை அதிகரிக்க செய்யும். மேலும் இது உங்களது நிதி வாழ்க்கையை மேம்படுத்தும்.