இந்து தர்மத்திலும், ஆன்மீகத்திலும் 'முக்தி' அல்லது 'மோட்சம்' அடைவதுதான் ஒரு ஆன்மாவின் இறுதி இலக்கு. ஒருவருக்கு இதுவே கடைசிப் பிறவி, இதற்குப் பின் பிறப்பிறப்புச் சுழற்சி இல்லை என்பதை உணர்த்தும் 5 ஆன்மீக மற்றும் உளவியல் அறிகுறிகள் இதோ...
உங்களுக்கு யாராவது துரோகம் செய்தாலோ அல்லது அசிங்கப்படுத்தினாலோ, பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் தோன்றவே தோன்றாது. "அவங்க கர்மா அவங்களை பாத்துக்கும்" என்று கடந்து போவீர்கள். இந்த 'மன்னிக்கும் குணம்' உங்கள் கர்ம வினைக் கணக்கை க்ளோஸ் செய்கிறது. கணக்கு தீர்ந்தால் மறுபிறவி இல்லை!
25
கூட்டத்தில் இருந்தாலும் தனிமை பிடிக்கும்:
உலக விஷயங்கள், வெட்டி அரட்டைகள், பார்ட்டிகள் மீது உங்களுக்கு இருந்த ஆர்வம் குறைந்துவிடும். அதே சமயம், தனிமையில் இருக்கும் போது உங்களுக்குள் ஒரு ஆழ்ந்த அமைதியும், எல்லையற்ற மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்களோடு நீங்களே உரையாடத் தொடங்கிவிட்டால், உங்கள் ஆன்மா உலக மாயைகளில் இருந்து விடுபடத் தொடங்கி விட்டது என்று அர்த்தம்.
35
அசைக்க முடியாத சகிப்புத்தன்மை :
வாழ்க்கையில் மிகப்பெரிய இன்பம் வரும் போது துள்ளிக் குதிக்காமலும், மிகப்பெரிய இழப்பு அல்லது துன்பம் வரும்போது உடைந்து போகாமலும் இருப்பீர்கள். எதையும் சமமாக ஏற்கும் மனப்பக்குவம் (சமநிலை) வந்துவிட்டால், நீங்கள் உலக பந்தங்களை அறுத்துவிட்டீர்கள் என்று பொருள். இந்த பக்குவமே பிறவா நிலையின் முக்கிய அறிகுறி.
புது கார் வாங்கணும், பெரிய பங்களா கட்டணும், பெரிய ஆள் ஆகணும் என்கிற லௌகீக ஆசைகள் உங்களுக்குள் தானாகவே செத்துவிடும். பேராசை இல்லாத, அத்தியாவசியத் தேவைகள் மட்டுமே கொண்ட எளிய வாழ்க்கை உங்களுக்குப் பிடிக்கும். ஆசைகள் குறைந்து, எதிலும் பற்று வைக்காத மனநிலை ஏற்படும்.
55
பிரபஞ்சத்தோடு ஒன்றிப்போதல்:
மனிதர்களை விட செடி, கொடிகள், பறவைகள், விலங்குகள் மீது உங்களுக்குள் ஒரு பேரன்பு சுரக்கும். ஒரு எறும்பைக் கூட மிதிக்கத் தோன்றாத அளவிற்கு ஜீவகாருண்யம் பிறக்கும். எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் இந்த உயர்ந்த நிலை, உங்கள் ஆன்மா தூய்மையடைந்து பிரபஞ்சத்தோடு கலக்கத் தயாராகிவிட்டதை உணர்த்தும் முக்கியமான அறிகுறி.