ஓம் சரவணா பவ என்ற மந்திரத்தை எத்தனை முறை கூற இயலுமோ அத்தனை முறை கூறி வாருங்கள். பூஜையின் போது இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இப்படி சொல்வதால் தடைபட்ட அனைத்து சுப காரியங்களும் கைகூடி வரும்.
மனநலம் மற்றும் உடல்நலம் ஆகியவை நீங்கப்பெற்று இன்பமாக வாழலாம்.
படிக்கின்றிலை பழனித் திருநாமம்,
படிப்பவர் தான் முடிக்கின்றிலை முருகா என்கிலை,
முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை பரமானந்தம் மேற்கொள் ,
விம்மி விம்மி நவிக்கின்றிலை ,நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே!
இந்த மந்திரத்தை கூறலாம் அதே போன்று திருமுருகாற்றுப் படை,கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம் போன்றவற்றையும் வாசிக்கலாம் அல்லது ஒலி வடிவில் கேட்கலாம். இதனை கேட்பதால் அல்லது கூறுவதால் நல்ல அதிர்வலைகள் ஏற்படும்.
ஓம் என்ற பிரணவ மந்திரத்தை கூட கூறலாம்.பௌர்ணமி நாளான இன்று இதனை கூறுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும். இன்றைய தினத்தில் இந்த மந்திரங்களை ஒரு மனதாக கூறி முருகப்பெருமானின் அபீரீதமான ஆசியை பெற்றும், கேட்ட வரங்களையும் பெற்று வாழ்வில் சுபிட்சம் பெறுங்கள் .
பங்குனி உத்திரத்தன்று இந்த 1 பொருளை வீட்டில் வைத்து வழிபட்டால் வாழ்வில் அடுத்தடுத்து வெற்றிகள் குவியும்!