சனி பெயர்ச்சி பலன்கள்.. இந்த 3 ராசிகளுக்கு பண மழை பொழியும்! இப்ப தொடங்கி 2025 வரை பொற்காலம் தான்!

First Published | Apr 4, 2023, 4:52 PM IST

சனியின் தாக்கத்தால் 2025ஆம் ஆண்டு வரை 3 ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள். சனியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். 

சனி பகவான் நீதி, கர்மாவின் கிரகம். மக்கள் செய்யும் செயல்களின் அடிப்படையில் தான் அவர்கள் நல்லது அல்லது கெட்ட பலன்களை அனுபவிப்பார்கள். சனி மட்டுமே ஒரு ராசியில் சுமார் இரண்டரை வருடங்கள் இருக்கும் ஒரே கிரகம். இதன் காரணமாக தான் ஒருவருக்கு சனியின் நன்மை மற்றும் தீமைகள் நீண்ட காலம் நீடிக்கும். 

இந்தாண்டு, ஜனவரி 17ஆம் தேதி, சனி தனது அடிப்படை திரிகோண ராசியான கும்பத்தை கடந்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் கும்ப ராசியில் நுழைந்துள்ளார். 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி வரை சனி கும்ப ராசியில் இருப்பார். இதனால் 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமும், செல்வமும் பெறுவார்கள். அவர்களை குறித்து இங்கு காணலாம். 

Tap to resize

மகரம்

சனியின் சஞ்சாரம் மகரம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பணவரவு அமோகமாக இருக்கும். சனியின் பிரவேசத்தால் உங்கள் பேச்சில் சிறப்பான தாக்கம் ஏற்படும். அதனால் மக்கள் உங்களால் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த நேரத்தில் நீங்கள் வாகனங்கள், சொத்துக்களை வாங்கலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு ராசிக்கு சனி பகவான் 2 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வத்தை அள்ளி கொடுக்க இருக்கிறார். ஜனவரி முதல் இந்த ராசிக்கு நல்ல நேரம் தான். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சகோதரர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். 

இதையும் படிங்க: இரவில் நகம் வெட்டக்கூடாது! மாதவிடாய் வந்தால் பெண்கள் சமையலறைக்கு போக கூடாது, இந்து நம்பிக்கைகளின் பின்னணி!

சனியின் சஞ்சாரம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் தொய்வில்லாமல் முடிவடையும். தொழில் சம்பந்தமான பயணங்களும் மேற்கொள்ளலாம். உங்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டது. 

இதையும் படிங்க: அட்சயதிரிதியை 2023 எப்போது வருகிறது? இந்த நாளில் தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கணும் தெரியுமா?

Latest Videos

click me!