நீங்கள் இந்த ராசியா? அப்போ உங்களுக்கு இந்த மாதிரி நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு! பார்த்து நடந்துக்கோங்க!

First Published | Apr 4, 2023, 4:34 PM IST

ஆக ஒவ்வொரு ராசியினருக்கும் எந்த மாதிரியான நோய்கள் வரக்கூடும் என்பதனை இந்த பதிவில் காணலாம்.

நாம் இந்த மண்ணிற்கு வரும் முன்பே அதாவது தாயின் கருவில் இருந்த நேரத்தை கணக்கில் கொண்டும், மண்ணில் பிறந்த நேரத்தை பொறுத்தும் நமது ஜாதகமும் அதற்கான பலனும் அமையும். அந்த வகையில் ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கு சில குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று ஜோதிட சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது.

ஆக ஒவ்வொரு ராசியினருக்கும் எந்த மாதிரியான நோய்கள் வரக்கூடும் என்பதனை இந்த பதிவில் காணலாம்.

மேஷ ராசியினருக்கு:

செவ்வாயை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசியினருக்கு ரத்த சம்மந்தமான நோய்கள் உண்டாகலாம். அதோடு இதய நோய், பைல்ஸ் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம். தவிர விந்து குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டாம். தவிர பல் வலி, பல் கடித்தல் போன்ற பிரச்னைகள் காணப்படும். மேஷ ராசிகாரர்கள் பலரும் அதிக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆகையால் எளிதில் அதிக எரிச்சல் மற்றும் கோபம் வராகி கூடியவர்களாக இருப்பார்கள் .

ரிஷப ராசியினருக்கு:

சுக்கிரனை ராசி அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு தொண்டை, கீழ் தாடை, இன்சுலின் சுரத்தல் போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் இந்த ராசிகாரர்களுக்கு அடிக்கடி சளி மற்றும் காய்ச்சல் போன்றவை உண்டாகும். மேலும் சுக்கிரன் வலுவெற்று காணப்பட்டால் தொண்டை தொற்று,காது மற்றும் கழுத்து பிரச்சைனையும் , தைராய்டு பிரச்சினையம் வரக்கூடும் .

இவர்களுக்கு கருப்பை சமந்தமான கோளாறு, கருக்கலைப்பு, நீரழிவு,சரும நோய் போன்றவை உண்டாக வாய்ப்புண்டு.

மிதுன ராசிகாரர்களுக்கு:

இரட்டையர்கள் என தெரியப்படும் மிதுனத்திற்கு உடலில் இருக்கும் இரட்டை சுவாச உறுப்புக்கள், கண்கள், மூட்டுகள், போன்றவை பாதிக்க வாய்ப்புகள் உண்டு. தவிர வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், தொழு நோய், குழந்தை இன்மை, மனம் சார்ந்த பிரச்னை போன்றவைகளும் உண்டாக வாய்ப்பு உள்ளதாம்.

கடக ராசிக்காரர்களுக்கு :

சந்திரனை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு செரிமான அமைப்பு மற்றும் வயிறு நேரடி தொடர்பில் இருப்பதால் வயிற்றில் அல்சர், குடல் சார்ந்த தொந்தரவுகள், செரிமான கோளாறுகள் போன்றவற்றால் அவதியுறுவார்கள். தவிர மார்பு சளி, கபம், கல்லீரல், மண்ணீரல் போன்ற நோய்கள் உண்டாகலாம்.

சிம்ம ராசிக்கார்களுக்கு:

சூரியனை ராசி அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினருக்கு முதுகு வலி, இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஆகியவற்றால் பாதிபாதிப்படைவீர்கள்.அதோடு அல்லாமல் வயிறு கோளாறுகள், பித்தம் மற்றும் கண் நோய் போன்றவை உண்டாகும்.

கன்னி ராசிகாரர்களுக்கு:

புதன் பகவானை ராசி அதிபதியாக கொண்ட கன்னி ராசியினருக்கு மலச்சிக்கல் , வயிறு உப்பிசம் போன்ற பிரச்சனைகள் ,செரிமாண கோளாறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. ஒரு சிலருக்கு தோல் சம்பந்தமான நோய்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

Tap to resize

துலாம் ராசிகாரர்களுக்கு :

சுக்கிரனை ராசி அதிபதியாக கொண்ட சுக்கிர ராசியினருக்கு சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் தொற்றுகள் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. அதோடு சருமம் சார்ந்த பிரச்சினைகள் , கண் கோளாறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு.

விருச்சக ராசிகாரர்களுக்கு :

செவ்வாயை ராசி அதிபதியாக கொண்ட விருவகக ராசியினருக்கு , இனப்பெருக்கு மண்டல பிரச்சினை உணடாக வாய்ப்பு உண்டு. தவிர பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும் அதோடு சிறுநீரக தொற்று உண்டாக வாய்ப்பு உள்ளது.

தனுசு ராசிகாரர்களுக்கு :

குருவை ராசி அதிபதியாக கொண்ட தனுசு ராசியினருக்கு கண்சம்பந்தமான கோளாறுகள், கல்லீரல், தொடையில் வடுக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்குமாம். தவிர முதுகெலும்பு பிரச்சனை உண்டாகும்.

மகர ராசிகாரர்களுக்கு :

சனி பகவானை ராசி அதிபதியாக கொண்ட மகர ராசியினருக்கு எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் உண்டாகலாம்.

கும்ப ராசிகாரர்களுக்கு :

சனி பகவானை ராசி அதிபதியாக கொண்ட கும்ப ராசியினருக்கு இதயம் சம்மந்தமான கோளாறுகள், மூட்டு வீக்கம், வாதம், நரம்பு சார்ந்த பிரச்சனைகள், அலர்ஜி, ஆஸ்துமா உள்ளிட்ட உடல் கோளாறுகள் உண்டாகும்.

மீன ராசிகாரர்களுக்கு :

குரு பகவானை ராசி அதிபதியாக கொண்ட மீன ராசியினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவதால் பல்வேறு நோய்கள் உண்டாகும் .

உடம்புல பல்லி விழுந்துருச்சா !அப்போ என்ன பலன் என்று தெரிஞ்சுக்கோங்க!

Latest Videos

click me!