வழிபடும் முறை:
வேல் படத்தை வைத்து விட்டு, ஒரு சிறிய அகல் விளக்கில் விளக்கேற்றி விட்டு வேல் வழிபாடு செய்து மன நிறைவுடன் பிரார்த்தனை செய்து கொண்டு, இனி வாழ்க்கையில் நான் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற வேலவனான நீயே அருள் புரிய வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக்கொள்ள வேண்டும். ஒரு மனதுடனும் , நம்பிக்கையோடும் உள்ளம் உருகி பிராத்தனை செய்யுங்கள்.
பூஜை அறையில் மட்டுமல்லாமல் வரவேற்கும் அறை அல்லது நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்களில் இந்த வேல் படத்தை வைத்து வழிபாடு செய்து வாருங்கள். உங்களுடைய பைக் கீ செயின் போன்றவற்றிலும் வேல் கீ செயின் வாங்கி உபயோகிக்கலாம். அதே போன்று உங்கள் கைப்பேசியின் முன் திரையில் வேல் படம் வைக்கலாம்.
இப்படி வேல் வைப்பதால் நாம் பார்க்கும் இடங்களில் வேல் தென்படும் போது நமது செயல்களில் வெற்றி பெற தன்னம்பிக்கையும், உத்வேகத்தையும் அதிகரிக்க செய்யும்.
வீட்டில் கஷ்டமே வராமல் இருக்க , காலை எழுந்த பின்பு முதலில் இதை செய்தாலே போதும் ! வாழ்வில் சுபீட்சம் உண்டாகும்