குழந்தை பிறந்த சில நாள்களில் அவர்களுக்கு பலவிதமான ஆபரணங்களை அணிவார்கள். கை, கால்களில் கண்மை வைப்பது, கருப்பு கயிறுகளை கட்டிவிடுவது என குழந்தைகளுக்கு கண் திருஷ்டி கழிக்க பல விஷயங்களை பெற்றோர் செய்வார்கள். சிலர் குழந்தையின் கால் கைகளில் வெள்ளி வளையல், கொலுசு ஆகியவற்றை அணிவிப்பதை நாம் பார்த்திருப்போம். ஜோதிட சாஸ்திரத்தின் படி குழந்தைகளுக்கு வெள்ளி அணிவிப்பது பல நன்மைகளை கொடுக்கும் என நம்பப்படுகிறது.
வெள்ளி உடலில் ஆற்றலை அதிகரிக்கும்
ஜோதிட சாஸ்திரங்களின் படி பார்த்தால், வெள்ளி என்ற உலோகம் சந்திர பகவானுடன் தொடர்புடையது. சந்திரன் மனம், செழிப்பு ஆகியவற்றை குறிக்கும். ஆகவே குழந்தைகளுக்கு வெள்ளியை அணிவது ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். வெள்ளி நம் உடலில் இருந்து வெளியேறும் ஆற்றலை போகவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. நம் உடலில் இருந்து கை, கால் வழியாக சக்தி வெளியேறும். அதனால் குழந்தையின் கை, கால்களில் வெள்ளியை அணிவித்தால், அவர்களின் உடலில் இருந்து ஆற்றல் வெளியேறாது என நம்பப்படுகிறது. வெள்ளி அணியும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்களாம்.
வெள்ளி கிருமி நாசினி
அறிவியல் உண்மை என்னவென்றால் வெள்ளி கிருமி நாசினி உலோகமாகும். குழந்தைகள் நோய்களை எதிர்த்து போராட வெள்ளி உதவுகிறது. அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைரஸ்கள், பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட குழந்தைகளுக்கு துணை புரிகிறது. வெள்ளி வளையல்கள் போடும் குழந்தைகளின் கைகள், கால்கள் பலவீனமாக இருக்காது.
வெள்ளி நம் உடலில் நேர்மறை ஆற்றலை தூண்டும். ஆகவே குழந்தைகளுக்கு வெள்ளி வளையல், கொலுசு அணிவிக்கும்போது அவர்கள் ஆற்றலுடன் உணர்கிறார்கள். அவர்களின் மன வளர்ச்சிக்கு வெள்ளி உதவுகிறது. சுருக்கமாக சொன்னால் வெள்ளி அணியும் குழந்தைகளிடம் நேர்மறை ஆற்றல் இருக்கும். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என ஜோதிடம் நமக்கு சொல்கிறது.
இதையும் படிங்க: Chicken : கர்ப்பிணிகள் சிக்கன் சாப்பிட்டால் பல நன்மைகள்.. ஆனால்?