நோய்,திருஷ்டி,தோஷம் என பலவற்றை நீக்கும் கருங்காலியின் பயன்கள் என்னென்ன?யார் அணியலாம்?என்ன பலன்கள் பார்க்கலாம்

First Published Apr 1, 2023, 6:45 AM IST

கருங்காலியை நாம் அணிவதால் நம் உடலில் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்பதை இந்த பதிவில் காணலாம்

ஆன்மீக பூஜை பொருட்களில் அரிதான, முக்கியமான ஒன்று தான் கருங்காலி. இந்த கருங்காலியை மாலையாக, காப்பாக, தாயத்தாக, பிரேஸ்லெட்டாக, வளையலாக இப்படி பல விதங்களில் அணியலாம். இதன் பூ, பட்டை , வேர், மற்றும் பிசின் ஆகிய அனைத்தும் மருந்துவ குணம் நிறைந்து காணப்படுகிறது.

இப்படி கருங்காலியை நம் உடலில் அணிவதால் என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவில் காணலாம்.

இந்த கருங்காலி மாலையை ஆண்கள், பெண்கள் என்ற பேதமின்றி அனைவரும் அணியலாம். இப்படி அணிவதால் உடம்பில் இருக்கும் கெட்ட சக்திகள் மற்றும் எதிர் மறை ஆற்றல்களை கட்டுப்படுத்தும்.

இந்த கருங்காலியானது நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவானுக்குரியது. இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் கருங்காலி அணிவதால் நமக்கு கிடைக்கும்.

கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் அதனால் தான் அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகத்திலும் கருங்காலி கட்டைகளை கோபுர கலசங்களில் உள்ளே போடுவார்கள். இதனால் கோயிலை சுற்றி வசிக்கும் மக்களை இடி மின்னல் போன்றவற்றால் எந்த பாதிப்பும் ஏற்பாடமல் இந்த கலசங்கள் கவசங்களாக மாறி காக்கும். இந்த மரத்தின் நிழலில் அமர்ந்தால் கூட நோய் அனைத்தும் நீங்கும் வல்லமை பெற்றது.

இந்த கருங்காலியை நாம் அணிவதால் உடலின் இரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டும் திறன் பெற்றது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்கிறது.

குறிப்பாக ஆண்,பெண் மலட்டுத் தன்மையை நீக்கி குழந்தை பாக்கியத்தை கொடுக்கும். பெண்கள் இதனை அணிந்து கொள்வதால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். ஆண்கள் இதனை அணிவதால் அவர்களின் ஆண்மை சக்தி அதிகரித்து உடலை உறுதியாக வைக்கிறது.

உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு ஏற்படும். கருங்காலியை அணிவதன் மூலம் கோபங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை உணர முடியும். மன பயத்தை நீக்கி தைரியத்தைக் கொடுக்கும்.

திக்கி திக்கி பேசுபவர்கள் இதனை அணிந்து வந்தால் நல்ல பேச்சு திறமை வரும். தொழில் செய்பவர்கள் கருங்காலி கட்டையை தொழில் விருத்தி அடையும். நிலங்கள் வாங்க வழிவகை செய்யும். விஷ பூச்சிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும். வாகனங்களில் இதனை கட்டுவதால் விபத்துகள் ஏற்படுவதை தடுத்து, நமது பயணங்களை பாதுகாக்கும். தவிர நெருப்பின் பயம் போக்கி அதிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமணம் விரைவில் நடைபெறும். சகோதர , சகோதரி பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

குளிர்ச்சி தன்மை கொண்ட இது உடலுக்கும், பற்களுக்கும் வலிமையை தரும்.கருங்காலி கட்டையானது கசப்பும் துவர்ப்பும் கலந்த சுவையை கொண்டுள்ளது. தவிர எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டது.

வைரம் பாய்ந்த கட்டை அதாவது மிகவும் பழமையான மற்றும் வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த வகையில் கருங்காலிக் கட்டையானது மிகப் பழமையான ஒன்றாகும்.கருங்காலி கட்டையை தண்ணீரில் ஊற வைத்தால் அதன் நிறம் மாறும்.அந்த நிறம் மாறிய தண்ணீரில் குளித்து வர உடலில் இருக்கும் எல்லா வலிகளும் நீங்கும்.

யார் யார் அணியலாம்:

பொதுவாக கருங்காலியை மேஷம், விருச்சிகம் ராசி கொண்டவர்கள்,அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரம் கொண்டவர்கள்அணியலாம். தவிர செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள் அணிந்து கொள்ளலாம். அதோடு மார்ச் 21 - ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களும் அணியலாம்.(அதாவது பங்குனி முதல் சித்திரை வரை பிறந்தவர்கள்)

அதோடு அல்லாமல் குழந்தை இல்லாதவர்கள், நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டவர்கள், உடலில் துர் சக்தி கொண்டவர்கள்,வியாபாரம் செய்பவர்கள் என பலரும் இந்த கருங்காலியை ஏதோ ஒரு வடிவத்தில் அணிந்து கொள்ளலாம். அல்லது கட்டையை வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம். 

வைரம் பாய்ந்த மரத்தை வைத்து செதுக்கி மணிகளாக செய்து கருங்காலி மாலையை 108 மணிகள் வைத்து கோர்த்து மாலையாக செய்யப்படுகிறது.

தேகம் வலுப்பெற்று, ஆன்மாவை பலபடுத்தி, ஆண்டவனைச் சரணாகதி அடைய கருங்காலியைத் தொழுவோம்.

இளநீர் நல்லதுன்னு நினைச்சிருப்பீங்க.ஆனா தென்னங்குருத்தும் நல்லதாம்ங்க! இது இத்தனை நோய்களை விரட்டுமாம்.

click me!