செல்லும் வழியில் கிடக்கும் பணத்தை எடுத்து செலவழிக்கலாமா? இதனால் நம் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

Published : Mar 31, 2023, 05:47 PM ISTUpdated : Mar 31, 2023, 05:53 PM IST

சாலையில் கிடைக்கும் பணத்தை எடுத்து சிலர் தானம் செய்வார்கள். அப்படி செய்யாமல், இன்னொரு காரியத்தை செய்தால் லட்சுமியின் கடாட்சம் கிடைக்கும். அது சரி சாலையில் கிடக்கும் பணத்தை பார்ப்பது நல்ல சகுனமா? அதனால் என்னென்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் முழுமையாக காணலாம். 

PREV
15
செல்லும் வழியில் கிடக்கும் பணத்தை எடுத்து செலவழிக்கலாமா? இதனால் நம் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

நாம் வெளியே செல்லும்போது சில நேரங்களில் சாலையில் சில்லறைகள் அல்லது நோட்டுகள் கிடப்பதை பார்த்திருப்போம். இப்படி சாலையில் கிடைக்கும் பணத்தை சிலர் கோயில் உண்டியலில் போடும் பழக்கத்தை வைத்திருப்பர். ஆனால் அந்த பணத்தை நம்மிடம் வைத்திருப்பதும் தானம் கொடுப்பதும் தவறு என்கிறார்கள் ஜோதிட நிபுணர்கள். ஏனெனில் மற்றவர்களின் பணத்தை நாம் வைத்திருப்பதன் மூலம் நமக்கு இழப்பு தான் ஏற்படும். இந்து சாஸ்திர நூல்களில் உள்ள அற விதிகள் நம்முடைய சொந்த பணத்தில் தானம் செய்ய அறிவுறுத்துகிறது. மற்றவர் பணத்தில் கொடுக்கும் தானம் அசுபமாக கருதப்படுகிறது. சாலையில் நாம் பணத்தை கண்டால் அதற்கு என்ன அர்த்தம்? 

25

வழியில் பணம் கிடப்பதை பார்த்தால் அதிர்ஷ்டமா? 

*ஒரு நாணயம் சாலையில் கிடப்பதை பார்த்தால், உங்களுக்கு வேலை தொடர்பாக ஒரு புதிய தொடக்கம் உருவாகும் என்பது அர்த்தம். பாதியில் கிடக்கும் வேலைகள் முடியும் என நம்பப்படுகிறது. நிதி நெருக்கடியிலிருந்து விடுபடப் போகிறீர்கள்.  

*சாலையில் பணம் பெறுவது மகாலட்சுமியின் மகிழ்ச்சியையும், தர்மத்தின் பலனையும் குறிக்கிறது. உங்களிடம் ஏதேனும் சொத்து இருந்தால், அதன் வழியாக நீங்கள் பலனடையப் போகிறீர்கள் என்று அர்த்தம். 

35

*சாலையில் ரூபாய் நோட்டு கிடப்பதை நீங்கள் கண்டால், கடன் சுமை விலக போகிறது என அர்த்தம். கடன் அனைத்தும் அடைபடும். 

*நீங்கள் வீட்டிற்கு வெளியே அல்லது வீட்டிற்கு மிக அருகில் பணத்தை பார்த்தால், உங்கள் குடும்பம் முன்னேறும். வாழ்க்கையில் வெற்றி பெற போகிறீர்கள் என்பது அறிகுறியாகும். 

*அலுவலகம் அல்லது வேலை செய்யும் இடத்திலிருந்து வீடு திரும்புகையில் ரோட்டில் பணத்தைக் கண்டால், அது எதிர்காலத்தில் அந்த நபர் தனது வேலையில் முன்னேற்றம் காண்பார் என்பதற்கான அறிகுறியாகும். 

45

பணப்பையைக் காணும் நபரின் வாழ்க்கையில் செல்வம் கொட்ட போகிறது என்பதன் அறிகுறியாகும். அவர் நிறைய பணம் சம்பாதிக்கும் வழிகள் உருவாகும். அவருடைய வாழ்க்கை கஷ்டங்கள் நீங்கப் போகிறது என்பதைக் காட்டுகிறது.  

இதையும் படிங்க: வீட்டில் தங்கம் குவிய! இந்த எளிய பரிகாரம் 1 செய்தால் போதும்..! அடகுக்கு போன நகை கூட கைக்கு வரும்!!

55

கீழே கிடக்கும் பணத்தை எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? 

சாலையில் பணத்தை பார்த்தால், அதை நன்கொடையாக, காணிக்கையாக கொடுக்கக் கூடாது. அந்த பணத்தில் ஏதாவது வாங்கி, ஏழைகளுக்கு உணவாக கொடுப்பதே சிறந்தது. சாலையில் எடுக்கும் பணத்தை யாருக்கேனும் கொடுத்தால், ​​'இந்தப் பணத்திற்கு உரியவருக்கு இந்த நற்செயலின் பலன் சேரும்' என்று மனதில் சொல்ல வேண்டும்.    

சாலையில் பணம் எடுத்தால் இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள். மகாலட்சுமியின் அருள் கிடைக்கப் பெறுவீர்கள். 

இதையும் படிங்க: இந்தியாவுல இயங்கும் இந்த ரயிலுக்கு டிக்கெட் தேவையில்லை.. 1 பைசா செலவில்லாமல் போய்ட்டு வரலாம்..!!

click me!

Recommended Stories