வசம்புக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி மிகுந்து காணப்படுகிறது. நாம் பணம் வைக்கும் இடங்களில் பீரோ, பர்ஸ் போன்றவைகளில் இந்த வசம்பை வைக்கலாம். மேலும் பூஜை அறை, கிச்சனில் உப்பு ஜாடி, அரிசி போடும் டப் அல்லது பக்கெட் என்று போன்றவற்றிலும் இந்த வசம்பை வைக்கலாம். இப்படி வைப்பதால் பணம் எப்போதும் நம் பர்சில் தாங்கும் தவிர வீண் செலவுகள் வருவதை இந்த வசம்பு தடுக்கும்.
ஒரு கண்ணாடி டப்பாவை எடுத்துக்கிட்டு அதில் பெயர் சொல்லாதது ஒன்றை எடுத்துக்கங்க. பெயர் சொல்லாதது என்றால் என்னன்னு கேக்குறீங்களா? வசம்பின் மற்றொரு பெயர் தான் பெயர் சொல்லாதது. அதன் பின் ஒரு 100 ரூபாய் அல்லது 500 நோட்டு எடுத்துக் கொண்டு பிறகு கல் உப்பு ஜாடியையும் எடுத்துக்கோங்க. இப்போது இந்த தாந்திரீக பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
எடுத்துக்காட்டாக 500 ரூபாய் நோட்டை எடுத்துக்கிட்டு பூஜை அறையில் வைத்து சாமிகிட்ட எனக்கு இருக்கும் கடன் பிரச்சனை தீரணும்னு , வீண் செலவு வரக்கூடாதுன்னு கும்பிடுங்க! நாம் எடுத்து வைத்துள்ள வசம்பை அந்த ரூபாய் நோட்டில் வைத்து நன்றாக சுருட்டிக் கொள்ள வேண்டும். அடுத்தது இந்த ரூபாய் நோட்டை மஞ்சள் அல்லது பச்சை நிற நூல் வைத்து கட்டி எடுத்து வைத்துள்ள உப்பு ஜாடியில் போட்டு மூடிடுங்க.