வீட்டில் தங்கம் குவிய! இந்த எளிய பரிகாரம் 1 செய்தால் போதும்..! அடகுக்கு போன நகை கூட கைக்கு வரும்!!

First Published | Mar 31, 2023, 12:44 PM IST

நகைகள் அடமானத்திற்கு செல்லாமல், கடன் பெருகாமல் வீட்டில் தங்கம் சேர இந்த எளிய பரிகாரத்தை முயன்று பாருங்கள். 

தங்கத்தில் முதலீடு செய்தால் அவசரத்திற்கு உதவும் என்பார்கள். தங்கத்தை அணியவும், வாங்கவும் விரும்பாதவர்கள் ரொம்ப குறைவு. சிலரிடம் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். சிலருக்கோ எவ்வளவு முயன்று குண்டுமணி தங்கம் கூட வாங்க யோகம் இருக்காது. அடகு வைத்த நகையை மீட்க முடியாமல், மகளின் திருமணத்திற்கு நகை எடுக்க முடியாமல் சிரமப்படுபவர்கள் வீட்டில் இந்த எளிய பரிகாரம் செய்தால் வீட்டில் தங்கம் பெருகி கொண்டே இருக்கும். 

தங்கம் வாங்கவே முடியாத சூழல் இருப்பவர்களுக்கு சொர்ணதோஷம் இருக்க வாய்ப்புள்ளது. தங்கத்தை நகையாக செய்வதற்கு முன்பும், கடைகளில் விற்கும்போதும், அடகு வைத்தாலும் அதில் பலருடைய கைகள் தொட்டிருக்கும். அப்படி தொட்டவர்களுக்கு நல்ல எண்ணம், தீய எண்ணம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படி பலரின் கைகள் படுவதால் அதில் சொர்ணதோஷம் ஏற்படுகிறது. அந்த தங்கத்தை வாங்கி நம் வீட்டில் வைத்தால் தங்காது. இந்த தோஷம் விலக சில பரிகாரங்களை இங்கு காணலாம். 

Tap to resize

ஒரு சுத்தமான கிண்ணத்தில் நகையை வைத்து அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதனுள் ஒரு தாமரை மலரை வைத்து பன்னீர் பூ, ஆவாரம்பூ ஆகிய இரண்டையும் தண்ணீருக்குள் போட்டு கொள்ளுங்கள். உங்கள் கைகளை அந்த தண்ணீரில் நனைத்து சொர்ண தேவதையை மனதார வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள். இப்படி 5 நிமிடங்கள் கைகளை தண்ணீருக்குள் வைத்து "வீட்டில் இருக்கும் சொர்ணதோஷம் விலகி, தங்கம் சேர வேண்டும்" என பிரார்த்தனை செய்தால் வீட்டில் தங்கம் தங்கும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை செய்தால் தான் பலன் கிடைக்கும். 

இந்த பரிகாரத்தை பொறுத்தவரை அந்த மூன்று மலர்களும் சொர்ணதோஷத்தை ஈர்த்து கொள்ளும். பிரார்த்தனை செய்த பிறகு அந்த 3 பூக்களை வாழை இலையில் வைத்து கொள்ளுங்கள். அதனுடன் தங்க நகைகளை வைத்து மஞ்சள் நூல் கொண்டு கட்டி பூஜை அறையில் சுவாமி திருவுருவ படம் முன்பாக வைத்துவிடுங்கள். திங்கள்கிழமை அன்று அந்த முடிச்சை அவிழ்த்து நகைகளை எடுக்கலாம். அந்த பூக்களை கால்படாத இடத்தில் போட வேண்டும்.

பரிகாரம் 2: 

கண்ணாடி கிண்ணத்தில் கொஞ்சம் பச்சை கற்பூரம், 3 கிராம்புகள், 2 துளசி இலைகள் எடுத்து, அத்துடன் ஒரு பொட்டு தங்கம் அல்லது ஏதேனும் சிறிய தங்க நகையை வைத்து, பீரோவிற்குள் வைத்துவிடுங்கள். இந்த பொருள்கள் பெருமாள், மகாலட்சுமிக்கு இணக்கமான பொருட்கள் என்பதால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை அழிக்கும். நேர்மறை ஆற்றலை அதிகமாக்கும். கொஞ்ச நாளில் வீட்டில் தங்கம் சேர தொடங்கும். அடகு வைத்த நகைகள் கூட வீட்டிற்கு வந்துவிடும். அதற்கு வழி பிறக்கும். இந்த பரிகாரம் வெள்ளிக்கிழமை தான் செய்ய வேண்டும். 

இதையும் படிங்க: பெண்கள் காலில் குங்குமத்தை பூசி கொண்டால், வீட்டில் பணம் பெருகும் என்கிறார்கள். ஜோதிடம் இப்படியா சொல்கிறது?

பரிகாரம் 3 

புது தங்கம் வாங்கினால் அல்லது அடகு வைத்த நகையை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தால் உடனே சுத்தமான நீரில் கழுவி கொள்ள வேண்டும். அதை கொண்டு வந்ததும் பயன்படுத்தக் கூடாது. சுத்தமான நீரில் கழுவிய பிறகு கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி போட்டு அடுத்து அதை கழுவி கொள்ள வேண்டும். இந்த மாதிரி பரிகாரத்தை வெள்ளியன்று அல்லது பௌர்ணமி நாளில் செய்ய வேண்டும். இந்த நகைகளை கழுவிய பிறகு பூஜை அறையில் வைத்து கொள்ளுங்கள். குரு ஹோரை நேரத்தில் பூஜித்து, அந்த நகைகளை சுவாமி திருவுருவப் படத்திற்கு முன்பு வையுங்கள். கொஞ்ச நேரம் பிரார்த்தனை பண்ணிய பிறகு பயன்படுத்துங்கள். இப்படி செய்தால் அடமானத்தில் மீட்ட நகைகள் திரும்ப அடகுக்கு செல்லாமல் நம்மிடம் தங்கும்.  

இந்த 3 பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றினை மனதார நம்பி, சுமார் 3 வாரங்கள் அல்லது 6 வாரங்கள் விடாமல் தொடர்ச்சியாக செய்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் தங்கம் தங்கும். கையில் பணம் சேர்ந்து தங்கம் வாங்கும் யோகம் கிடைக்கும். வீட்டில் பணப்புழக்கமும் தங்கம் சேர இதை வெள்ளிக்கிழமை செய்து பாருங்கள். 

இதையும் படிங்க: ஏப்ரல் மாதத்தின் முக்கிய விரதம், பண்டிகைகள் குறித்த முழுவிவரம்.. !

Latest Videos

click me!