Today Rasipalan 31st Mar 2023: பண விஷயத்தில் யாரையும் நம்பக்கூடாத ராசிக்காரர் யார்..?

Published : Mar 31, 2023, 05:30 AM IST

மார்ச் 31ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 31st Mar 2023: பண விஷயத்தில் யாரையும் நம்பக்கூடாத ராசிக்காரர் யார்..?

மேஷம்:

இன்றைய கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. சமூக சேவைகளில் ஆர்வம் செலுத்தும் அதேவேளையில், உங்கள் இலக்கை அடைவதற்காகவும் உழைப்பீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். எந்த பிரச்னையையும் சுமூகமாக முடிக்க பாருங்கள். குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவசியம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும்.
 

212

ரிஷபம்:

முக்கியஸ்தர்களுடனான சந்திப்பால் ஆதாயம் கிட்டும். நிலுவையில் இருந்த சொத்து விவகாரம் முடிவுக்கு வரும். பதற்றமடையாமல் பிரச்னைகளை அமைதியாகவும் நிதானமாகவும் கையாண்டு முடிக்கவும். எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும்.  தொழிலில் ஆவணம் ரீதியான விஷயங்களில் அதிக கவனம் தேவை.
 

312

மிதுனம்:

தேங்கிக்கிடந்த வேலைகள் முடியும். அதனால் நீங்கள் மற்ற வேலைகளில் கவனம் செலுத்தலாம். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மோசமான சூழல்களில் பயப்படாமல் தீர்வை எட்ட முயற்சி செய்யுங்கள். முறையான நிர்வாகத்தால் தொழில் நன்றாக இருக்கும். ஊழியர்களும் ஒத்துழைப்பு தருவார்கள்.
 

412

கடகம்:

உங்களுக்கு சாதகமான நாள். ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும். அனைவரிடமும் சகஜமாக பழகுங்கள். தொழிலில் சில தடைகள் ஏற்படலாம். உத்யோகஸ்தர்கள் உங்கள் வேலையின் தரத்தை அதிகப்படுத்துங்கள். 
 

512

சிம்மம்:

இன்றைய தினம் உங்களுக்கு அமைதியாகவும் சிறப்பாகவும் இருக்கும். அவசரப்படாமல் நன்றாக யோசித்து முடிவெடுக்கவும். பொருளாதார சூழல் நன்றாக இருக்கும். உறவில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை அகற்றும் முயற்சி வெற்றியளிக்கும். தனிப்பட்ட வேலைகளில் அதிக கவனம் செலுத்தவும். காரணமே இல்லாமல் கோபப்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு மதிப்பளிக்கவும்.
 

612

கன்னி:

முதலீடு செய்வதில் உங்கள் மூளையின் பேச்சை கேட்டு செயல்படவும். இப்போது செய்யும் முதலீடு கண்டிப்பாக எதிர்காலத்தில் ஆதாயம் தருவதாக அமையும். அதிகமான வேலைப்பளுவால் மனம் உளைச்சல் அடையும். பொறுமையாக இருந்து, எதையும் ஈசியாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் திட்டங்களை, காத்திருந்து சரியான நேரத்தில் செயல்படுத்தவும். 
 

712

துலாம்:

உங்கள் கடின உழைப்புக்கேற்ற ரிசல்ட் கண்டிப்பாக கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு இருக்கும். அதீத நம்பிக்கையால் பிரச்னை ஏற்படலாம். உங்கள் திட்டங்களில் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும்.
 

812

விருச்சிகம்:

இளைஞர்களுக்கு அவர்களது கெரியர் தொடர்பான நற்செய்தி கிடைக்கும். சகோதரர்களுக்கு இடையே பிரச்னை ஏற்படும். பொறுமையாக இருந்து நிதானமாக செயல்பட்டு உறவுகளை காப்பாற்றவும். தொழிலில் நின்று போன வருவாய்க்கான வழி மீண்டும் பிறக்கும். 
 

912

தனுசு:

சிறிது காலமாக இருந்துவந்த பிரச்னை உறவினர்களின் உதவியுடன் முடிவுக்கு வரும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் நேரம் செலவிடுங்கள். நெருங்கிய நண்பருடனான உறவு கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். தொழில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்களை மறுபரிசீலனை செய்யுங்கள். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.
 

1012

மகரம்:

வீட்டு பிரச்னைகளை தீர்த்து வைப்பீர்கள். தெரியாத நபரால் கஷ்டப்படுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். இளைஞர்கள் கெரியர் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. கூட்டுத்தொழிலில் ஆதாயம் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும்.

1112

கும்பம்:

தேங்கிக்கிடந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். இளைஞர்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டும். உங்களுக்கு பிடித்த செயல்களில் நேரம் செலவிடவும். பிரச்னைகளை நினைத்து கவலைப்படாமல் அமைதியான முறையில் தீர்வை எட்ட முயலுங்கள். தொழிலில் கவனம் தேவை.

1212

மீனம்:

சாமர்த்தியத்தால் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிவீர்கள். திட்டமிட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வெற்றி காண்பீர்கள். செலவுகள் அதிகரிப்பால் சேமிக்க முடியாது. கோபத்தால் உறவில் விரிசல் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories