கோயிலில் இருந்து கொண்டு வரும் இந்த 3 பொருளை பிறருக்கு கொடுக்காதீங்க.. வீட்டிற்கு வந்த தெய்வம் வெளியேறிவிடும்.!

First Published | Mar 30, 2023, 10:26 AM IST

கோயிலில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரும் 3 பொருள்களை பிறருக்கு ஒருபோதும் கொடுக்கக் கூடாது. மீறி கொடுக்கும்போது நம்முடன் வீட்டிற்கு வந்த தெய்வம் வீட்டை விட்டு வெளியேறிவிடும் என்கிறது சாஸ்திரம். 

கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த பிறகு என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது? என்பது குறித்து இன்றும் பலருக்கு குழப்பங்கள் நிலவி வருகிறது. சில செயல்களை நாம் செய்யும் போது கோயிலுக்கு சென்று வந்த பலனை முற்றிலுமாக இழந்து விடுவோம். நம்முடன் வீட்டிற்கு வந்த தெய்வம் வெளியேறிவிடும் என்று பெரியோர் சொல்கிறார்கள். கோயிலில் இருந்து கொண்டு வரும் எந்த பொருளை பிறருக்கு தரக்கூடாது? என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம். 

கோயிலுக்கு சென்று வரும்போது நம்மீது நேர்மறை ஆற்றல் நிரம்பி காணப்படும் ஆகவே கோயில் இருந்து வந்தவுடன் கை கால்களை சுத்தம் செய்யவோ, குளிக்கவோ கூடாது. சிலர் வெளியூருக்கு பயணம் செய்து கோயிலில் தரிசனம் செய்திருப்பார்கள். ஆகவே வீட்டிற்கு வந்ததும் குளிப்பார்கள். ஆனால் கோயிலுக்கு சென்று திரும்பிய பிறகு எப்போதும் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நாம் கோயிலில் இருந்து கொண்டு வந்த நல்ல ஆற்றல் நம்மிடம் தங்காமல் போக வாய்ப்புள்ளது. 

Latest Videos


கோவிலுக்கு சென்று வந்தவுடன் செய்யக் கூடாத காரியங்கள்; கோயிலில் பிரசாதமாக பெற்ற குங்குமம், விபூதி, மஞ்சள், மாலை ஆகியவற்றை வீட்டில் கொண்டு வந்து தரையில் வைக்கக்கூடாது. பூஜை அறையில் ஒரு தட்டில் மரியாதையாக வைக்க வேண்டும். கோயிலில் இருந்து கொண்டு வரும் மாலை, பூ ஆகியவற்றை யார் காலிலும் விழாதவாறு பத்திரமாக வைத்து காய்ந்ததும் பசு மாட்டிற்கு கொடுக்கலாம். கோயிலில் கொண்டு வரும் எந்த பொருளை பிறருக்கு கொடுக்கக் கூடாது தெரியுமா? 

கோயிலில் நமக்கு பிரசாதமாக கொடுக்கும் பொருட்களை பிறருக்கு கொடுக்கக் கூடாது. கோயிலில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரும் மஞ்சள், குங்குமம், விபூதி ஆகியவற்றை நாம் பிறருக்கு வழங்கலாம். ஆனால் எலுமிச்சை பழம், பூ, மாலை ஆகிய பொருள்களை கோயிலில் நமக்கு பிரசாதமாக கொடுத்தால், பிறருக்கு அதை ஒருபோதும் கொடுக்கக் கூடாது. அப்படி நாம் கொடுக்கும் போது தெய்வ ஆற்றல் நம்மிடம் இருந்து நீங்கிவிடும். 

கோயிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் வீண் சண்டை விவாதங்களில் ஈடுபடக் கூடாது. அபசகுணமான வார்த்தைகளை பேசுவது, மற்றவர்களை திட்டுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக நாம் கோயிலுக்கு சென்றால் அங்கு இருக்கும் நேர்மறை ஆற்றல் நம் மீது வந்து தங்கும். வீட்டிற்கு வந்து இது மாதிரியான எதிர்மறை காரியங்களில் ஈடுபடும்போது, நாம் சொல்லும் அபசகுன வார்த்தைகள் நமக்கே பலித்து துன்பத்தை தரலாம். 

இதையும் படிங்க: பெண்கள் காலில் குங்குமத்தை பூசி கொண்டால், வீட்டில் பணம் பெருகும் என்கிறார்கள். ஜோதிடம் இப்படியா சொல்கிறது?

காலையில் கோயிலுக்கு சென்று திரும்பினால், அன்றைய தினம் மாலையில் முடி வெட்டுவது, சவரம் செய்வது, அழகுப்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்துவது ஆகியவற்றை செய்யக்கூடாது. கோயிலுக்கு சென்று திரும்பிய பிறகும், ஆன்மீக பயணங்களை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த உடனேயும் துக்க நிகழ்வுகளுக்கும் தீட்டு வீடுகளுக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும். 

நம்முடைய துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கவே நாம் கோயிலுக்கு செல்கிறோம். ஆனால் கோயிலுக்கு சென்று திரும்பிய பிறகு வீட்டில் சில காரியங்களை தவறுதலாக செய்வதால், மேலும் துன்பங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். அதனால் இனி கவனமாக இருங்கள். இறைவனின் அருளை முழுமையாக பெறுங்கள். 

இதையும் படிங்க: Rama navami 2023: ராம நவமி அன்று செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை முழுவிவரம்..!

click me!