பங்குனி மாதத்தில் புனர்பூச நட்சத்திரம், சுக்லபட்ச நவமி திதி இணைந்த நன்னாளில் திருமால் ராம அவதாரம் எடுத்ததை 'ஸ்ரீ ராம நவமி' என கொண்டாடுகிறோம். இன்றைய தினம் ராமர்- சீதை கல்யாணம், சிறப்பு வழிபாடுகள் கோயிலில் விமரிசையாக நடைபெறும். கோயிலுக்கு சென்று தரிசம் செய்தால் புண்ணியம் என்பது ஐதீகம். ஏனெனில் திருமாலின் அவதாரத்தில் ராம அவதாரம் தான் ரொம்ப சிறப்பு வாய்ந்தது.
ராம நவமி நாளான இன்று வீட்டில் செய்யும் ஒரு பூஜை நம் தலையெழுத்தையே மாற்றிவிடும் என்றால் நம்புவீர்களா? நம்பி செய்து பாருங்கள் பலன் கிடைக்கும். பணக்கஷ்டம் நீங்க இந்த சின்ன பூஜையை செய்யலாம். இந்த பூஜை ராம நவமி நாளில் மாலை நேரத்தில் செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு நெய்வேத்தியமாக நீர், மோர் பானகம் ஆகியவற்றை தயார் செய்து வையுங்கள்.
உங்களுடைய வீட்டு பூஜை அறையில் இராமருடைய சிலை அல்லது ராமரின் உருவம் பதித்த டாலர் ஆகியவை இருந்தால் கூட பூஜைக்கு பயன்படுத்தலாம். அப்படி எதுவும் இல்லாதபட்சத்தில் 1 ரூபாய் நாணயம் போதும். அதை ஸ்ரீஇராமராக நினைத்து தாம்பாளத்தில் வையுங்கள். ராமர் சிலை இருப்பவர்கள் அதனுடன் இந்த 1 ரூபாயை வைத்து வணங்கலாம். பூஜையை தொடங்கும் முன்பு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வையுங்கள். பின்னர் ராமருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய பால், தயிர், நெய், தேன், சர்க்கரை ஆகியவை தயாராக வைத்து சிலை அல்லது ராமராக நினைத்துக் கொண்ட 1 ரூபாய்க்கு அபிஷேகம் செய்யுங்கள். பின்பு நாணயத்திற்கு மஞ்சள், குங்குமம் எடுத்து பொட்டு வைக்க வேண்டும். அந்த நாணயத்தை வெற்றிலையின் மீது வைக்க வேண்டும். ஏற்கனவே தயாரித்து வைத்த நெய்வேத்தியங்களை சுவாமி முன் வைத்து தீப தூப ஆராதனை காட்டி பூஜை செய்யுங்கள். அப்போது 'ஸ்ரீ ராம ஜெயம்' என்ற ராம நாமத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். ராம நாமத்தை சொல்வதால் ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.
இதையும் படிங்க: ராமநவமி அன்று ராம நாமம் 1 முறை சொன்னால்... இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்..!
ராம நவமி பூஜை முடிந்த மறுநாள், அதாவது நாளை (மார்ச்.31) நீங்கள் பூஜை அறையில் வைத்து வழிபட்ட ஒரு ரூபாயை துணியில் முடிச்சாக கட்டி பணம் வைக்கும் இடத்திலோ வியாபாரம் செய்யும் இடத்திலோ வைக்க வேண்டும். அந்த இடம் பணம் புழங்கும் இடமாக இருக்க வேண்டும். அந்த 1 ரூபாய் நாணயம் இருக்கும் இடத்தில் பண வரவு பெருகும். வீடு, வியாபார ஸ்தலம் எங்கு வைத்தாலும் எல்லா பணக்கஷ்டமும் நீங்கி பணவரவு பெருகும். ராமன் அருளில் வாழ்க்கை வளமாகும்.
இதையும் படிங்க: Rama navami 2023: ராம நவமி அன்று செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை முழுவிவரம்..!