சபரிமலை தரிசன நேரத்தில் மாற்றம்: எந்தெந்த நேரத்தில் தரிசனம் செய்யலாம்? முழு விவரம் வெளியீடு

First Published | Oct 12, 2024, 8:20 AM IST

வரும் மண்டல - மகரவிளக்கு சீசனில், சபரிமலை கோவில் தரிசன அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக 17 மணி நேரம் கோவில் நடை திறந்திருக்கும்.

Sabarimala

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலம், மகரவிளக்கு பூஜைகள் வருகின்ற நவம்பர் 16ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) தலைவர் பிஎஸ் பிரசாந்த் மற்றும் தலைமை அர்ச்சகர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  நடப்பு ஆண்டில் பக்தர்களின் தரிசன நேரத்தை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேவசம் போர்டு தலைவர் பிஎஸ் பிரசாந்த் கூறுகையில், சபரிமலை கோவிலில் தரிசன நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
 

Ayyappan Temple

“தந்திரி (தலைமை அர்ச்சகர்) இந்த விஷயத்தில் மிகவும் ஒத்துழைக்கும் அணுகுமுறையைக் காட்டினார். இம்முறை சபரிமலையில் மெய்நிகர் வரிசை முறை மட்டுமே அமலில் இருக்கும், ஆனால் ஒவ்வொரு பக்தர்களுக்கும் தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். தேவையான ஏற்பாடுகளைச் செய்ய நாங்கள் அரசாங்கத்துடன் ஒருங்கிணைப்போம், ”என்று TDB தலைவர் கூறினார்.

Tap to resize

Sabarimala Temple

ஸ்பாட் புக்கிங்கை நீக்கிவிட்டு மெய்நிகர் வரிசையை மட்டுமே அனுமதிக்கும் முடிவு குறித்து பல கவலைகள் எழுப்பப்படுவதாக அவர் கூறினார். “கடந்த ஆண்டு புனித யாத்திரை காலத்தில், கோவிலில் சில நாட்களாக வரலாறு காணாத கூட்டம் காணப்பட்டது. அவர்களை போலீசார் தடுக்க வேண்டியதாயிற்று. நாங்கள் அதனை ஆராய்ந்து பார்த்த போது, குறிப்பிட்ட நாட்களில் 20,000 க்கும் மேற்பட்ட ஸ்பாட் புக்கிங் இருந்தது. எங்களைப் பொறுத்தவரை, வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையைப் பற்றியது அல்ல, ஆனால் பக்தர்களின் பாதுகாப்பே முதன்மையானது” என்று பிரசாந்த் கூறினார்.

Ayyappan Temple

மேலும் இந்த ஆண்டு அதிகாலை 3 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பின்னர் பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் தரிசனம் மேற்கொள்ளலாம். இதன் மூலம் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 17 மணி நேரம் தரிசனம் கிடைக்கும். இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sabarimala

மெய்நிகர் வரிசை முன்பதிவுகளுக்கு 48 மணிநேர சலுகை காலம் வழங்கப்படும். கடந்த ஆண்டு மண்டலம்-மகரவிளக்கு யாத்திரை காலத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களை நிர்வகிக்க தவறிய கேரள அரசு மீது கடும் சர்ச்சை எழுந்தது. கூட்டத்தை நிர்வகித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதில் பல குறைபாடுகள் யாத்ரீகர்கள் தரிசனம் இல்லாமல் திரும்பிச் செல்ல வழிவகுத்தது.

Latest Videos

click me!