தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றாக சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து கோவிலுக்கு வருவது வழக்கம். கொரோனாவுக்கு பின்பு கோவிலில் பக்தர்கள் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். மேலும் முன்பதிவு செய்யாத பக்தர்கள் கடந்த ஆண்டு உடனடி முன்பதிவு முறையில் அனுமதிக்கப்பட்டனர்.