ஆலோசனை கூட்டத்தில் நிர்வாக இயக்குனர் பேசுகையில்: பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்கவும், போக்குவரத்துத்துறை அமைச்சர் வழிக்காட்டுதலின்படியும் இச்சிறப்பு பேருந்து விரைவில் இயக்கப்படவுள்ளது. சிறப்பு சுற்றுலா பேருந்து கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் எண்கண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் (திருவாரூர் மாவட்டம்), சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலன் ஆலயம், பொரவச்சேரி அருள்மிகு கந்தசாமி திருக்கோவில், எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம்) ஏரகரம் ஆதி சுவாமிநாதசுவாமி திருக்கோவில், சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் ஆகிய ஆறு கோவில்களையும் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக ஆறுமுருகன் திருத்தலம் சுற்றுலா பேருந்து இயக்கப்படவுள்ளது.