
நவராத்திரி என்பது இந்தியாவில் இந்துமதத்தைன் பின்பற்றும் மக்களால் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகையானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். ஒன்பது நாட்களும் துர்க்கையின் 9 வடிவங்களையும் ஒவ்வொரு நாளும் வழிபடுவார்கள். அந்த வகையில் இந்த 2024ஆம் ஆண்டு நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 3ம் தேதி வியாழக்கிழமை அன்று தொடங்கி அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை அன்று முடிவடைகிறது.
பொதுவாக நவராத்திரி நாளில் வீட்டில் கொலு வைத்து நைவேத்யமாக சுண்டல் செய்வார்கள். அதுபோல வீட்டில் வருபவர்களுக்கு பிரசாதம் கொடுப்பார்கள். இப்படி பல விஷயங்கள் எல்லாம் நடக்கும். அந்த வகையில், வீட்டில் கொலு வைக்கிறார்களே அது ஏன் தெரியுமா? கொலுவில் பலவிதமான பொம்மைகள் வைக்கப்படுகிறது. அதற்கான ஆன்மீக காரணம் என்ன என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: நவராத்திரி 2024 : விரதம் இருப்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. விரத பலன்கள் கிடைக்காமல் போகும்!
தேவி ஆதிபராசக்தி இந்த உலகத்தை அருளாட்சி செய்கிறாள் என்று நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்தே. மரம், செடி, புல், பூண்டு, புழு, பசு, புலி மற்றும் மனிதன் என எல்லா உயிரினங்களிலும் தேவி இருக்கிறாள். எனவே, தேவியை காண வேண்டும் என்று ஒரே நோக்கத்திற்காக தான் நவராத்திரி நாளில் கொலு வைக்கப்படுகிறது.
நவராத்திரி நாளில் வைக்கப்படும் பொம்மையானது சக்தியின் வடிவம் என்பதால் அவை அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படும். நவராத்திரி நாளில் வீட்டில் கொலு வைப்பது மட்டும் போதாது. எல்லா உயிரினங்களும் தன் உயிர் என்ற மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதை தான் தேவி விரும்புகிறாள்.
அதுபோல நவராத்திரியானது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை என்பதால் மாலை வேலையில் முருகன், கிருஷ்ணன், ராதை, கணபதியே, ராமன், அம்மன் போன்ற வேஷங்களை குழந்தைகளுக்கு போட்டு கொலு வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்து செல்வார்கள். எந்த தெய்வத்தின் வேஷங்களில் குழந்தைகள் போட்டிருக்கிறார்களோ, அந்த தெய்வமே தன்னுடைய வீட்டிற்கு குழந்தையின் வடிவில் வருவதாக அவர்கள் சந்தோஷமடைவார்கள்.
இதையும் படிங்க: நவராத்திரி 2024 : எந்த நிறங்களில் 9 நாட்களும் ஆடை அணிந்தால் என்ன பயன் கிடைக்கும்?
நவராத்திரி கொலு பொம்மைகள் :
நவராத்திரி கொலு பொம்மை வைக்க ஒன்பது படிகள் அமைக்கப்பட்டு அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான பொம்மைகள் அடுக்கி வைப்பார்கள். அதாவது,
முதல் படி - மரம், செடி, கொடி, மர பொம்மைகள் போன்ற ஓரறிவு உயிரினம் வைக்கப்படும்
2வது படி - நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள் போன்ற இரண்டு அறிவு உயிரினம் வைக்கப்படும்.
3வது படி - எறும்பு, கரையான் பொம்மைகள் போன்ற மூன்றறிவு உயிரினம் வைக்கப்படும்.
4வது படி - நண்டு, வண்டு, பறவை பொம்மை போன்ற நான்கறிவு உயிரினம் வைக்கப்படும்.
6வது படி - மனித பொம்மைகள் போன்ற ஆறறிவு உயிரினம் வைக்கப்படும்.
7வது படி - மகரிஷிகள், முனிவர்கள் போன்ற பொம்மைகள் வைக்கப்படும்.
8வது படி - தேவர்கள், நவகிரகங்கள், பஞ்சபூதங்களின் தெய்வங்கள் போன்ற பொம்மைகள் வைக்கப்படும்.
9வது படி - சிவன், விஷ்ணு, பிரம்மா, விநாயகர், அம்மன் போன்ற கடவுள்களின் பொம்மைகள் வைக்கப்படும்.