தீபாவளி என்றால் ஒரே கொண்டாட்டம் தான். ஆம், தீபாவளி பண்டிகை அனைவரும் எதிர்பார்க்கும் பண்டிகைகளில் ஒன்றாகும். அதுவும் குறிப்பாக குழந்தைகள் இந்நாளுக்காக தான் காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில், தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து, புத்தம் புது ஆடைகளை உடுத்தி, பட்டாசுகளை கொழுத்திக் கொண்டாடி மகிழ்வார்கள். இதுதவிர இந்நாளில் வீட்டில் செய்யப்படும் பண்டம் பலகாரங்களை உண்டும், பிறருக்கும் கொடுத்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
பொதுவாக தீபாவளி பண்டிகை நாட்களில் புது புது பொருட்களை பெரும்பாலானோர் வாங்குவது வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சிலர் கார் அல்லது பைக் என புது வாகனங்களை வாங்குவார்கள். காரணம் இந்த தீபாவளி பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் தான். ஆம், தீபாவளி பண்டிகை காலங்களில் வழங்கப்படும் இந்த சலுகையானது வாகனம் வாங்க விரும்புவோரை கவர்ந்திழுக்கும்.
இன்னும் சிலரோ வீடு, தங்க நகைகள், நிலம் போன்றவற்றை வாங்குவார்கள்.