தரித்தரம் நீங்கி வீட்டில் செல்வ வளம் பெருக! இந்த 1 பொருளை வீட்டில் வைத்தால் போதும்!!

First Published | May 24, 2023, 2:25 PM IST

வீட்டில் குழப்பங்கள் ஏதுமின்றி நிம்மதியான சூழல் அமையவும், செல்வம் செழிக்கவும் செய்ய வேண்டிய வழிபாடுகள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

குடும்பத்தில் அமைதியான சூழல் இருந்தால் நிம்மதி நிலைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், அக்கறையும் பெருக இறைவழிபாடு அவசியம். கடவுளின் ஆசி இருந்தால் வாழ்வில் எல்லா வளங்களும் அதிகமாகவே கிடைக்கும். வீட்டில் தெய்வ கடாட்சம் இருந்தால் பண வரவு அதிகமாகும். வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். 

செல்வ வளம் பெருக வழிபாடு 

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் பரவவும், குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கவும் வீட்டில் இந்த ஒரு பொருளை வைப்பது அவசியம். அந்த பொருள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை விரட்டும். சிலர் வீட்டிற்கு வந்ததும் இறுக்கமான முகத்துடன் கனத்த இதயத்துடன் காணப்படுவார்கள். தூக்கமின்மை, பசியின்மை, ஆரோக்கியத்தில் குறைபாடு, வீட்டில் எப்போதும் சண்டை, வெறுப்பு ஆகியவை வீட்டில் உள்ள கெட்ட சக்திகளால் ஏற்படுகிறது. சிலர் இதற்கு வாஸ்து பிரச்சனை காரணமாக இருக்கலாம் என கருதுவார்கள். கெட்ட நேரம், வாஸ்து பிரச்சனை, கெட்ட சக்திகள் போன்ற அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட இந்த ஒரு பொருளை வீட்டில் வைத்தால் போதும். 

Tap to resize

எளிய பரிகாரம் 

ஒரு கண்ணாடி கிண்ணம் அல்லது ஜாடி போன்ற ஏதேனும் ஒன்றை எடுத்து அதில் அருகம்புல்லை வைத்துவிடுங்கள். இதற்கு நடுவே சின்ன எலுமிச்சை பழத்தை வைத்து படுக்கை அறை, பூஜையறை, வரவேற்பு அறை, படிக்கும் அறை போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் வைக்கலாம். தூக்கமின்றி தவிப்பவர்கள் தங்களுடைய படுக்கையறையில் கண்ணாடி கிண்ணத்தில் அருகம்புல்லை, எலுமிச்சை பழத்துடன் சேர்த்து வைப்பது நல்லது. 

எலுமிச்சையின் ஆற்றல் 

ஆன்மீகத்தை பொருத்தவரை எலுமிச்சை பழத்திற்கு நல்ல சக்தி உண்டு. கெட்ட சக்திகளை தன்வசம் இழுத்து நேர்மறை ஆற்றலை பெருக செய்வது எலுமிச்சையின் பண்பாகும். இதைப் போலவே அருகம்புல்லுக்கும் நவகிரகங்களின் ஆற்றலை ஒன்றாக ஈர்க்கும் தன்மை உள்ளது. நம்முடைய வீட்டில் அருகம்புல்லை வைத்தால் நேர்மறை ஆற்றல் பெருகிக் கொண்டே போகும். 

இதையும் படிங்க: மொய் பணத்துடன் கூடுதலாக 1 ரூபாய் கொடுப்பது எதற்காக தெரியுமா? பலருக்கும் தெரியாத சுவாரஸ்சிய தகவல்!!

அருகம்புல்லையும், எலுமிச்சை பழத்தையும் அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதை நன்கு காய்ந்த பின்னர் மாற்றினால் போதும். எலுமிச்சை காய்ந்து போன பிறகு அதை கால் படாத இடத்தில் போட வேண்டும். அருகம்புல்லை வாடிய பிறகு பொடியாக செய்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. 

அருகம்புல் நன்மைகள் 

மருத்துவ ரீதியாக பார்க்கும் போது அருகம்புல் நம்முடைய உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். நாள்தோறும் ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடி சாப்பிட்டு வந்தால் பல நோய்கள் நம்மை நெருங்காது. ரத்தம் சுத்திகரிக்கப்படும். சரும வியாதிகள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். அருகம்புல்லில் எத்தனை நன்மைகள் காணப்படுகின்றன. 

ஆன்மீக ரீதியாக பார்க்கும் போது அருகம்புல் விநாயகனின் அம்சம். நவகிரக தோஷங்கள் இருப்பவர்களும் அருகம்புல்லை பயன்படுத்தும் போது எல்லா பாதிப்புகளும் நீங்கும். வாழ்வில் சுபிட்சம் பெறுவார்கள். 

இதையும் படிங்க: சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்!! எல்லாமே சாதகமாக முடியும்!!

Latest Videos

click me!