நம் வீட்டில் சமையலறை மிகவும் முக்கியமான ஒரு இடமாகும். மேலும் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை உண்டாக்கக்கூடிய தன்மையை கொண்டிருக்கும். அந்த வகையில் சமையலறையில் இருக்கக்கூடிய 4 பொருட்கள் எதிர்மறை ஆற்றல்களை வெளியிடுவதால் இவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
துடைப்பம்:
பெரும்பாலானோர் வீட்டின் சமையல் அறையில் துடைப்பம் இருக்கும். மகாலட்சுமியின் அம்சம் துடைப்பம் என்றாலும், அதை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைக்கவும். குறிப்பாக பூஜை அறை, சமையலறை மற்றும் வீட்டின் நிலை வாசலில் கொண்டு போய் வைக்க கூடாது. அவ்வாறு வைத்தால் வீட்டிற்கு வரக்கூடிய லட்சுமி தேவி கோபமடைவால் என்பது ஐதீகம். எனவே, இனி துடைப்பத்தை சமையல் அறையில் வைக்காதீர்.
குப்பை தொட்டி:
குப்பைத் தொட்டியை ஒருபோதும் சமையல் அறையில் வைக்க கூடாது. குறிப்பாக சமையல் கழிவுகளை உடனே அப்புறப்படுத்துவது நல்லது. ஏனெனில், நாள் முழுவதும் குப்பை கழிவுகள் சமையல் அறையில் இருந்தால் அங்கு அன்னபூரணியின் வாசம் குறையும். இதனால் வறுமை உண்டாகும். எனவே இந்த தவறை தெரியாமலும் கூட செய்யாதீர்.
iron nail
துருப்பிடித்த இரும்பு பொருட்கள்:
சமையல் அறையில் துருப்பிடித்த இரும்பு பொருட்களை வைக்க கூடாது. ஏனெனில் அவை எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும். குறிப்பாக இது சனி பகவானின் உலோகம். இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழும். எனவே இவற்றை ஒருபோதும் சமையல் அறையில் வைக்காதீர்கள்.