உங்க கைக்கு எப்பவும் பணம் வந்து கொண்டே இருக்கணுமா? இந்த 1 பொருளை பூஜை அறையில் வைங்க! பணக்கஷ்டமே வராது!!

First Published | May 20, 2023, 1:56 PM IST

உங்கள் வீட்டில் பணம் வற்றாமல் வந்து கொண்டேயிருக்க பூஜை அறையில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 

நாம் கடினமாக உழைத்தாலும் சில நேரங்களில் நம் வீட்டில் பணம் தாங்காது. வரவுக்கு மீறிய செலவு இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் சில எளிய பரிகாரங்களை செய்தால் உங்களுடைய வீட்டில் வற்றாமல் பணம் இருந்து கொண்டே இருக்கும். நாம் செலவு செய்த பணம் கூட மீண்டும் நம்முடைய வீட்டை தேடி வந்து விடும். அந்த அளவிற்கு பரிகாரத்திற்கு சக்தி உண்டு. 

உங்களுக்கு பணக்கஷ்டம், கடன் தொல்லை எப்போதும் இருப்பதற்கு ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகள் ஒரு காரணம் என்றால், வாஸ்து பிரச்சனைகள் மற்றொரு காரணம். இந்த பிரச்சனையை சரி செய்யாமல் நாம் எந்த பூஜை செய்தாலும், எந்த கோவிலுக்கு சென்று வணங்கினாலும் பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் நம்மை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

Tap to resize

இந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி நம் கையில் பணம் சேர குலதெய்வத்தினுடைய ஆசிர்வாதம் முக்கியம். ஒருவருக்கு குலதெய்வத்தின் அருள் கிடைத்தால் மட்டுமே அவருடைய இஷ்ட தெய்வம், பிற தெய்வங்களுடைய அருளும் ஆசியும் கிடைக்கும். நம்முடைய வீட்டின் அமைப்பில் ஏதேனும் பிசகு இருந்தாலும் குலதெய்வ அருள் கிடைப்பதில் தொடர்ந்து தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். இந்த பிரச்சனை நீங்க பூஜை அறையில் ஒரு பொருளை வைத்தால் போதும். அதற்கு ஒரு மண் கலசத்தில் அல்லது மண் குவளையில் கல் உப்பை நிரப்ப வேண்டும். 

மண் கலசம் 

மண் கலசத்தில் கல் உப்பு நிரப்பிய பிறகு அதன் நடுவில் சின்ன துண்டு வசம்பை வைத்து அதன் மீதும் கல் உப்பை போட்டு மூடி விடுங்கள். வசம்பு வெளியில் தெரியாதபடி உப்பை போட்டு வையுங்கள். இந்த கலசத்தின் மீது 520 என்ற எண்ணை மேற்புறமும், அதற்கு கீழாக 741 என்ற எண்ணையும் எழுதிக் கொள்ளுங்கள். இந்த கலசம் யார் கண்ணிலும் படக்கூடாது. பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு பின்புறமாக மறைத்து வையுங்கள். நாம் கலசத்தில் எழுதியுள்ள இந்த எண்கள் மந்திரங்களுக்கு ஒப்பானது. 

இதையும் படிங்க: வீட்டு பூஜையறையில் ஒரே கடவுளுக்கு நிறைய சிலைகள் வைத்திருப்பது நல்லதா?

பூஜை அறையில் வைத்துள்ள இந்த கலசத்தை மாதம் ஒரு முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எடுத்து அதில் இருக்கும் உப்பு, வசம்பு ஆகியவற்றை மாற்றி புதியதாக உப்பும், வசம்பும் சேர்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் யாருக்கும் தெரியாத வகையில் அதை மறைத்து வையுங்கள். இதனை தொடர்ந்து செய்து வருவதால் வீட்டில் பண பற்றாக்குறை இருக்காது. 

இதையும் படிங்க: மேஷ ராசியில் உருவான சதுர்கிரக யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் தான்! அமோகமா இருக்கும்..

Latest Videos

click me!