மேஷ ராசியில் உருவான சதுர்கிரக யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் தான்! அமோகமா இருக்கும்..

First Published | May 20, 2023, 11:00 AM IST

Chaturgrahi Yoga: தற்போது உருவாகியுள்ள சதுர்கிரக யோகம் 4 ராசியினருக்கு நம்ப முடியாத அமோகமான பலன்களை தரும். 

குரு பகவான் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். மேஷத்தில் தான் ராகுவும், புதனும் பயணிக்கின்றனர். தற்போது சந்திரனும் மேஷத்தில் பிரவேசித்துள்ளதால் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. சதுர்கிரக யோகம் என்றால் 4 ஒன்றாக பயணிப்பதை குறிக்கும். தற்போது மேஷ ராசியில் குரு, ராகு, புதன், சந்திரன் போன்ற 4 கிரகங்கள் இணைந்து பயணிப்பதால் தான் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் 4 ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கிறது.

கடகம் 

சதுர்கிரக யோகம் கடக ராசிக்கு நல்ல பலன்களை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் இந்த யோக காலத்தில் தடையின்றி முடிவடையும். கைக்கு வராமல் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படும் பணம் இப்போது உங்களை வந்து சேரும். சமுதாயத்தில் நன்மதிப்பும், குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகளையும் பெறுவீர்கள். 

Tap to resize

விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நல்ல மாற்றங்கள் நடக்கும். பணியிடங்களில் எடுத்த காரியத்தை நல்லபடியாக முடிப்பீர்கள். குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வாய்ப்புகள் அமையும். முடிக்கப்படாமல் பாதியில் விடப்பட்ட வேலைகளும் நல்லபடியாக முடியும். உங்களுடைய முதலீட்டில் நல்ல லாபத்தை பெறலாம். இந்த யோக காலம் மகிழ்ச்சியான காலமாக இருக்கும். 

மகரம் 

மகர ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டிற்கு போகும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சொல்லிக் கொள்ளும்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். அதிர்ஷ்டம் பெருகும். 

இதையும் படிங்க: வைகாசி மாத அமாவாசை எப்போது? அன்றைய தினம் ஏன் முருகன் வழிபாடு அவசியம் என்ற முழுதகவல்கள்!!

மீனம் 

மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரும். வியாபாரிகள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். முதலீடுகள் வரவை பெருக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியம், நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். 

இதையும் படிங்க: சனி வக்ர பெயர்ச்சியால் யாருக்கு யோகம்? குறிப்பா இந்த 5 ராசிகள் ரொம்ப கவனமா இருக்கணும்!

Latest Videos

click me!