சனி வக்ர பெயர்ச்சியால் யாருக்கு யோகம்? குறிப்பா இந்த 5 ராசிகள் ரொம்ப கவனமா இருக்கணும்!

First Published | May 18, 2023, 4:01 PM IST

சனியின் வக்ர பெயர்ச்சியால் மேஷம் உள்பட 5 ராசிக்காரங்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

சனி பகவான் கர்ம வினைகளின் பகவான். ஆயுள் காரகன் என்றும் அழைக்கப்படுவார். நமக்கு நீண்ட ஆயுள், அகால மரணம் இரண்டும் ஏற்பட காரணமானவர். இவருடைய வக்ர பெயர்ச்சியால் அடுத்து வரும் 5 மாதங்களில் சில ராசிகளுக்கு செலவு, விபத்து, நஷ்டம் போன்ற அசுப பலன்கள் ஏற்படலாம். எந்த ராசி கவனமாக இருக்க வேண்டும், யாருக்கு யோகம் என்று இங்கு காணலாம். 

மேஷம் 

சனியின் வக்ர பெயர்ச்சியால் தொழில், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த காலகட்டத்தில் மோசமான விளைவுகள் உங்களுக்கு ஏற்படலாம். உங்களுடைய வேலையில் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். எதிர்பார்த்த பலன் இல்லாமல் ஏமாற்றம் அடையவும் வாய்ப்புகள் உள்ளன. பணிச்சுமை உங்களை மன அழுத்தத்தில் தள்ளும். வணிகர்களை பொறுத்தவரை கொஞ்சம் கடுமையான சூழல்கள் இருந்தாலும், பண ஆதாயம் கிடைக்கும் காதலிப்பவர்களுக்கு கொஞ்சம் சிக்கலான காலம்தான். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும்; கடின உழைப்பு தேவை. 

அரச மர விநாயகரை வழிபட்டால் துன்பங்களை சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். அங்கே கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி வையுங்கள். 

Tap to resize

கடகம்

கடக ராசியினருக்கு இப்போது அஷ்டம சனி நடக்கிறது. உங்களுக்கு சாதகமற்ற காலம் எந்த முதலீடு செய்வதாக திட்டமிட்டாலும் கவனமாக இருப்பதும் முறையான ஆலோசனையும் தேவை பெரிய முதலீடுகளை இந்த காலத்தில் தவிர்ப்பதே சிறந்தது. புதிய வேலை போன்ற புதிய முயற்சிகளை எடுக்காமல் ஏற்கனவே இருக்கும் உத்தியோகத்தில் தொடர்வது நல்லது ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள் வாகனத்தில் செல்லும்போது நிதானமாக இருப்பது. திருமண வாழ்க்கையில் சற்று குழப்பம் வருத்தமும் ஏற்படலாம் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் விரக்தி அடைய வாய்ப்புள்ளது. 

சர்க்கரை சேர்த்த அரிசி மாவு உருண்டைகளை எறும்புகளுக்கு அளியுங்கள். 

துலாம் 

அடுத்து வரும் 5 மாதங்களில் துலாம் ராசியினர் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். சனியுடைய வக்கிரப் பெயர்ச்சி என்பது ஏற்ற இறக்கமான சூழலை உண்டாக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் ஏற்படலாம். பொருளாதார நெருக்கடி ஏற்படும். நினைத்த காரியம் தடைபடும். சூழல்கள் சிக்கலாக மாறும். வேலை மாற முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் குழப்பத்தில் காணப்படலாம்

சனிக்கிழமைஅன்று சிவபெருமானை தரிசித்து, ருத்ராபிஷேகம் பரிகாரமாக செய்யலாம். 

விருச்சிகம் 

இந்த பெயர்ச்சி காலத்தில் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கலாம். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். வீடு, மனை, சொத்து போன்ற விஷயங்களில் சிக்கல்கள் உண்டாகலாம். வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழல்கள் இல்லை. எனினும் உங்களுடைய முயற்சிகளுக்கு தக்க பலன் கிடைக்கும். புது சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் காலம் தாழ்த்துவது நல்லது. காத்திருங்கள். 

பரிகாரமாக எல்லா சனிக்கிழமையும் அனுமானை வழிபட்டால் நல்லது நடக்கும்

கும்பம் 

இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி, ஜென்ம சனி நடக்கிறது. இந்த நேரத்தில் சனி வக்கிர நிலையில் இருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். உங்களுடைய துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. பணி மற்றும் வியாபாரத்தில் நீங்கள் நினைத்த பலன்கள் கிடைக்க இரண்டு மடங்கு உழைப்பை செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். 

சனிக்கிழமைதோறும் சனி பகவானை வழிபாடு செய்து, கருப்பு எள்ளை ஓடும் நீரில் போட்டுவிடுங்கள். 

யோகம்: 

மிதுனம், சிம்மம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு அடுத்த 5 மாதங்கள் யோகமாக இருக்கும். இந்த ராசிகளுக்கு சொத்து வாங்கும் யோகம், வாழ்க்கையில் முன்னேற்றம் காண, நிதி முன்னேற்றம் போன்ற பல நன்மைகள் ஏற்படும். 

Latest Videos

click me!