குழந்தைகள் நன்றாக படித்து தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற சொல்ல வேண்டிய 1 வரி மந்திரம்

Published : Mar 08, 2023, 08:46 AM IST

கல்வியில் சிறந்து ,மேன்மை பெற சரஸ்வதி தேவியின் அனுகிரஹம் வேண்டும். அதற்கு இந்த சக்தி வாய்ந்த சரஸ்வதி தேவியின் ஒரு வரி மந்திரத்தை சொல்லுங்கள்.

PREV
13
  குழந்தைகள் நன்றாக படித்து தேர்வில் அதிக மதிப்பெண்களை  பெற சொல்ல வேண்டிய 1 வரி மந்திரம்

பள்ளி செல்கின்ற குழந்தைகள் இப்போது நடக்கும் ,நடக்க விருக்கும் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்தி கொண்டு வருகின்றனர். குழந்தைகள் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என்று தான் , நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று குழந்தகைளை நல்ல வைக்கின்றோம். இப்போது இருக்கும் அனைத்து குழந்தைகளும் அதிக புத்திசாலித்தனமான குழந்தைகளாகவும், படிக்கும் குழந்தைகளாகவும் தான் இருக்கிறார்கள். சிலக் குழந்தைகள் மந்த நிலையில் இருப்பார்கள்.

குழந்தைகள் தேர்வு நேரத்தில் படித்தது எல்லாம் மறந்து போகிறது என்று பலக் சொல்லி கேட்டு இருப்பீர்கள். இது மாற வேண்டுமென்றால் அவர்களுக்கு சரஸ்வதி தேவியின் அனுகிரஹம் கிடைக்க வேண்டும். அந்த அனுகிரஹம் அவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்க இந்த ஒரு மந்திரம் போதும் என்று ஆன்மிகம் சொல்லுகின்றது. அது என்ன மந்திரம் ,எப்படி சொல்லுவது என்பதை இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

பணவரவை அதிகரிக்க செய்யும் பச்சை கற்பூரத்தின் ரகசியங்கள் !

23
Astro Tips for Students- Exams coming up and not studying- Then do 'this' solution

கல்வியில் சிறந்து ,மேன்மை பெற சரஸ்வதி தேவியின் அனுகிரஹம் வேண்டும். அதற்கு இந்த சக்தி வாய்ந்த சரஸ்வதி தேவியின் ஒரு வரி மந்திரத்தை சொல்லுங்கள். பெற்றோர்களின்
பெரிய கனவே தங்கள் பிள்ளைகள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று நல்ல நிலையை அடைய வேண்டும் என்பது தான். இன்று ஒவ்வொரு பெற்றோரும் காலை முதல் மாலை வரை நேரம் காலம் பார்க்காமல் ஓயாமல் உழைத்து ,தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று தான்.

அடிப்படையில் அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும். இந்த கல்வி கிடைக்க நாம் பெரிய பெரிய பள்ளிகளில் மட்டும் சேர்த்து படிக்கச் வைத்தால் போதாது. படிப்பவை எல்லாம் அவர்கள் ஞயாபகம் வைத்து ,அதனை சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் புத்திக் கூர்மையும் வேண்டும். அதற்கு இந்த ஒரு வரி மந்திரம் போதும்.

குழந்தைகள் நன்றாக படிக்க சொல்ல வேண்டிய 1 வரி மந்திரம்:

ஓம் ஆத்ம வித்யா பிரம்ம சரஸ்வதி 

33

இந்த மந்திரத்தை 16 முறை குழந்தைகளின் காதில் அவர்கள் தூங்க (படுக்கும் போது ) செல்லும் போது சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்வதால் ஆழ் மனதில் சென்று பதியும் . நீ நன்றாக படிப்பாய் ,உனக்கு நல்ல திறமை இருக்கிறது, உனக்கு நல்ல ஞியாபக சக்தி இருக்கிறது. நீ தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவாய் என்ற வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்லி அவர்களின் மனதிற்குள் நம்பிக்கையும் , மந்திரத்தின் மூலம் சரஸ்வதி தேவியின் அனுகிரஹத்தை நாம் கொடுக்கும் போது நிச்சயம் அவர்கள் படிக்கும் அனைத்தும் ஞயாபகத்தில் இருந்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு, திறமை உள்ள குழந்தைகளாகவும் இருப்பார்கள்.

இதனை செய்வதோடு, அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று தேன் வாங்கி கொடுத்து, அபிஷேகம் செய்த தேனை தினமும் ஒரு சொட்டு குழந்தைகளுக்கு கொடுத்து வரும் போது அவர்களின் ஞியாபக திறன் அதிகரிப்பதுடன் படிப்பில் இன்னும் நல்ல முன்னேற்றம் அடைய முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படி சொல்லுவதால் அதிக சாத்தியக் கூறுகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

click me!

Recommended Stories