பணவரவை அதிகரிக்க செய்யும் பச்சை கற்பூரத்தின் ரகசியங்கள் !

First Published | Mar 8, 2023, 7:56 AM IST

நாம் ஓடி சம்பிதாகும் பணத்தை எப்படி தெய்வ அருளோடும்,பச்சை கற்பூரத்தின் வசியத்தை கொண்டும் எப்படி பெருக்குவது 
என்று இன்றைய பதில் பார்க்க உள்ளோம்.


 

இன்றைய இயந்திர வாழ்க்கையில் கணவன்,மனைவி என்று இருவரும் வேலைக்கு சென்றால் தான் காசு சேர்த்து வைக்க முடியும் என்ற நிலையில் தான் பலரும் பணிக்கு செல்லுகின்றனர். இப்படி ஓடி சம்பிதாகும் பணத்தை எப்படி தெய்வ அருளோடு பெருக்குவது என்று இன்றைய பதில் பார்க்க உள்ளோம்.

மருத்துவ குணமுடைய பச்சை கற்பூரம் .இந்த வீட்டினுடைய வாசலில் வைக்கும் பொழுது ஈர்ப்பு தன்மை அதிகரிக்கும். தொழில் ஸ்தாபனங்களில் வைக்கும் போது வசிய தன்மை அதிகரிக்கும். அதே போன்று பண வரவிற்கு பச்சை கற்பூரம் மிகவும் விஷேஷம்.

பணத்தை பெரிய அளவில் ஈர்க்கும் சக்தி பச்சை கற்பூரத்திற்கு உள்ளது.
பச்சை கற்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடித்து வைத்து அதனை குபேர மூலையில் வைத்து தீப தூபங்கள் காட்டி வழிபாடு செய்து வர வீட்டில் எப்போதும் பணம் நிலைத்து இருக்கும் என்று ஆன்றோர்களின் கருத்தாகும் .இயற்கையாகவே பச்சை கற்பூரத்தில் அதிக அளவில் வாசனை உள்ளது.அவ்வாசனைக்கு மிகப் பெரிய அளவில் சக்தி உள்ளது.

பூஜை அறையில் 2 முதல் 5 பச்சை கற்பூரத்தை வைத்து வழிபட்டால் எப்பொழுதும் வீட்டில் நிம்மதி இருக்கும்.வாழ்வில் ஒருவருக்கு மன நிம்மதி இல்லாமல் போவது என்பதற்கு முதல் காரணமே, வீட்டிலிருக்கும் துர்சக்திகளால் தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும் , அதன் மகத்துவத்தினாலும் வீட்டில் குடி கொண்டிருக்கும் துர்சக்தியை எளிதில் வெளியேற்றி விடலாம் மேலும் நமக்கு வீட்டில் எப்போதும் மன நிம்மதி கிடைக்கும்.

இவ்வாறு பூஜை அறையில் பச்சை கற்பூரம் வைப்பதால் நெகட்டிவ் விஷயங்களை களைத்து பாசிட்டிவ் எனர்ஜியை உருவாக்கும் .நிறைய நல்ல காரியங்கள் பண்ணுவதற்கு அற்புதமான பலன்களை கொடுக்கும் இந்த பச்சை கற்பூரம்.

சும்மா மென்று தின்றால் கூட போதும்.. நோயின்றி வாழ வைக்கும் வல்லாரை கீரை மகிமைகள்..!

Tap to resize

வீட்டில் செல்வங்கள் செழித்து இருப்பதற்கு இந்த பச்சை கற்பூரத்தை எப்படி பயன்படுத்துவது!

ஒரு சின்ன தட்டு மீது பச்சை கற்பூரத்தை வைத்து அதன் மேல் 1 ரூபாய் காயின் சந்தனம்,குங்குமம் வைத்து மல்லிப் பூ வைத்து உங்கள் தொழில் ஸ்தாபனங்களில் அல்லது வீடுகளில் வைத்து பாருங்க. தினந் தோறும் இதனை எடுத்து மாற்றி வைக்க வேண்டும். எடுத்த பச்சை கற்பூரத்தினை தண்ணீரில் போட்டு விட வேண்டும். அந்த காயினை தினமும் அலசி விட்டு உஸ் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது மஹாலக்ஷ்மியின் நாமங்கள் மற்றும் குபேரனின் நாமங்கள் சொல்ல வேண்டும். ஒரு பெரிய மாற்றங்களை கொடுக்கும் பச்சை கற்பூரத்தின் மகிமை அப்போது நீங்கள் உணருவீர்கள்.

மேலும் உங்கள் பர்சில் 2 பச்சை கற்பூரத்தை சிறிய துண்டு சீட்டில் வைத்து மடித்து அதனை வைத்தால் மற்றும் பண விரயங்கள் ஏற்படாமல் தடுக்கும். பணம் செலவானாலும்,மறுபுறம் பண வரவும் இருந்து கொண்டே இருக்கும். பல்வேறு அற்புதமான பலன்களை கொடுக்கும் இந்த பச்சை கற்பூரம் பிராயிசித்தம். இதனை செய்து பார்த்துநல்ல பலன்களை பெற்று வாழ்வில் முன்னேறுங்கள்.

Latest Videos

click me!