700 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி சேரும் 5 ராஜ யோகங்கள் - கோடிகளில் புரளப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?

Published : Mar 07, 2023, 05:59 PM ISTUpdated : Mar 07, 2023, 07:57 PM IST

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ராஜ யோகங்கள் உருவாகும் போது, அது ராசிகளை பாதிக்கவும் செய்கிறது. யோகங்களை வாரி வழங்கவும் செய்கிறது. அந்த வகையில் 700 ஆண்டுகளுக்குப் பிறகு கேதாரம், ஹம்சம், மாளவ்ய, சதுஷ்சக்ரா மற்றும் மஹாபாக்ய ஆகிய ராஜ யோகங்கள் கூட்டணி சேர்கின்றன. இதன் காரணமாக ராசிகளில் ஒரு சில ராசிகளுக்கு இந்த ராஜ யோகங்கள் கோடிகளில் புரளும் வாய்ப்பை வாரி வழங்குகின்றன. இதில், உங்களது ராசி இருக்கிறதா என்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்....  

PREV
14
700 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி சேரும் 5 ராஜ யோகங்கள் - கோடிகளில் புரளப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
கடகம் ராசி:

உங்களது ஜாதகத்தில் ஹம்ச மற்றும் மாளவ்ய ராஜ யோகம் அமைவது நல்ல பலனைத் தரும். சுக்கிரன் மற்றும் வியாழன் உங்களது ராசியின் அதிர்ஷ்டகரமான இடத்தில் சஞ்சாரம் செய்கின்றன. இதன் காரணமாக வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு காசு மேல காசு வரப் போகிறது. இவர்களது வாழ்க்கையில் இனி நிதி நிலை உயரும். புதிய பொறுப்புகள் கிடைப்பதுடன் பேரும், புகழும் கூடும். வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு என்று பயணம் மேற்கொள்வீர்கள்.
 

24
மிதுனம்:

இந்த 5 ராஜ யோகங்களின் கூட்டு சேர்க்கை உங்களது ராசிக்கு சாதகமான இடத்தில் இருக்கின்றன. உங்களது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறது. இது வியாழன் உடன் இணைந்து ஹம்ச ராஜ யோகத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பண வரவும் உண்டாகும். பணியாளர்களுக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்கப் பெறும். பதவி உயர்வு வருவதற்கும் வாய்ப்பு உண்டு.
 

34
கன்னி:

5 ராஜ யோகங்களின் சேர்க்கை உங்களது ராசிக்கு சாதகமான இடத்தில் இருக்கின்றன. உங்களது ஜாதகத்தில் 7ஆவது வீட்டில் மாளவ்ய ராஜ யோகம் உருவாகும். இந்த காலங்களில் வாழ்க்கைத் துணை மூலமாக உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு முன்னேற்றமான காலமாகவும் இருக்கும். கூட்டு தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் சூழல் உருவாகும். திருமணம் குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கலாம். நிதி நிலைமை சீராக இருக்கும்.
 

44
மீனம்:

ஹம்ச மற்றும் மாளவ்ய ராஜ யோகம் உங்களுக்கு மங்களகரமான பலனைத் தரும். இந்த காலங்களில் உங்கது தைரியமும், வலிமையும் கூடும். இந்த நேரத்தில் உங்களது வேலை மற்றும் தொழிலில் வெற்றிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணியாளர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கப் பெறும். நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும். நல்ல செய்திகள் தேடி வரும். ஆனால், ஏழரை சனியின் பிடியில் நீங்கள் இருப்பதால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories