உங்க வீட்டில் இருந்தால் இந்த செடிகள் இருந்தால்.. பணம் தன்னால வரும்.. அதிர்ஷ்ட மழை பொழியும்..

First Published | Mar 7, 2023, 1:56 PM IST

Lucky plants for home: வீட்டில் வளர்க்கக் கூடிய அதிர்ஷ்டம் தரும் செடிகள் சிலவற்றை இங்கு காணலாம். 

பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பொருளும் ஏதேனும் ஒரு ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. அதில் தாவரங்களும் விதிவிலக்கு இல்லை. நம் வீட்டில் சில செடிகளை வளர்க்கும் போது அதிர்ஷ்டம் நம் வீட்டை தேடி வரும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. அதில் சில தாவரங்களை குறித்து இங்கு காணலாம். வீட்டில் செடி வளர்க்க இடமில்லை என வருந்துபவர்களுக்கு உதவும் வகையில் தொட்டியில் வளர்க்கும் சில தாவரங்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 

கற்றாழை 

நம் வீட்டில் கற்றாழையை வளர்க்கும் போது நிச்சயம் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். கற்றாழையை புதர் மாதிரி வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு தொட்டியில் 1 அல்லது 2 கற்றாழை இருந்தால் கூட போதும். கற்றாழைக்கு நம் வீட்டில் உள்ள திருஷ்டிகளை விலக்கும் ஆற்றல் உண்டு. அதனால் கற்றாழையை வீட்டிற்கு முன்னால் தெருவில் போகிறவர்கள் கண்ணில் படும்படி வைத்தால் கண் திருஷ்டி விலகிவிடும். நேர்மறை ஆற்றல் வீட்டில் தங்கும். 

Tap to resize

வெற்றிலை

நம் வீட்டில் வெற்றிலை கொடியை வளர்த்தால் அதிர்ஷ்டம் வரும். வீட்டில் வளரும் வெற்றிலையை பறித்து ஆஞ்சநேயருக்கு மாலையாக தொடுத்து சாற்றினால், நமக்கு இருக்கும் எதிரிகள் தொந்தரவு விலகிவிடும். கவனம்... வெற்றிலையை மட்டும் வீட்டில் வளர்க்க கூடாது. மற்ற செடிகளுடன் தான் வெற்றிலையை வளர்க்க வேண்டும். தொட்டதெல்லாம் துலங்க வெற்றிலையை வளர்க்க வேண்டும் என்பார்கள். 

மணி பிளாண்ட் 

மணி பிளான்ட் வளர்க்கும்போது அதனை வீட்டில் உள்ளே அல்லது பால்கனியில் வைத்து தான் வளர்க்க வேண்டும். இந்த செடி அதிர்ஷ்டத்தை அளித்தாலும், நம் வீட்டில் இருந்து இதனை யாரேனும் திருடி சென்றுவிட்டால் நமக்கு தரித்திரம் உண்டாகும். திருடியவர் அதிர்ஷ்டகாரர் ஆகிவிடுவார். ஆகவே வீட்டுக்கு வெளியே வைக்க வேண்டாம். 

முல்லை 

பூக்களின் ராணியாக முல்லை கருதப்படுகிறது. தெய்வங்களுக்கு வைக்கும் பூவாக முல்லை உள்ளது. இதை வீட்டில் வைத்தால் குடும்பமும் மனமகிழ்வாக இருக்கும். வீட்டுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும். வீட்டின் வடகிழக்கு மூலையில் இதை வளர்க்கலாம். 

இதையும் படிங்க: இரவில் ஒரு கற்பூரம் ஏற்றி வாஸ்துபுருஷனை வழிபட்டால்.. துஷ்ட சக்திகள் விலகி ஓடும்..!

பாம்பு கற்றாழை 

வீட்டிற்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் தாவரங்களில் பாம்பு கற்றாழை முக்கியமானது. இது நச்சுக்களை உறிஞ்சி கொண்டு காற்றில் இருக்கும் ஒவ்வாமைகளை குறைத்துவிடுகிறது. வாஸ்து சாஸ்திரம் இதை அதிர்ஷ்டம் தரும் செடி என கூறுகிறது. இதனை படுக்கையறையில் வைத்தால் நல்லது. 

இதையும் படிங்க: வேண்டுதல்களை நிறைவேற்றும்.. ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்காலை விழா இன்று.. விண்ணை தொடும் வேண்டுதல் குரல்..!

Latest Videos

click me!