Holi 2023: ஹோலி அன்று தூவி விளையாடும் வண்ணங்களுக்கு இத்தனை சிறப்புகள் இருக்கா? இது வண்ணங்களின் திருவிழா..

First Published | Mar 7, 2023, 11:31 AM IST

Holi 2023: ஹோலி பண்டிகையின் சிறப்புகள் குறித்து இங்கு காணலாம். 

இந்தியாவின் வண்ணமயமான பண்டிகைகளில் ஹோலி திருவிழாவும் ஒன்று. இது மார்ச் 8ஆம் தேதி, அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. தீய சக்திகளை நல்லவை வெற்றி பெற்றதின் மகிழ்ச்சி கொண்டாட்டமாக ஒவ்வொரு ஆண்டும் பால் குணா மாதத்தில் ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையின் தனிச்சிறப்பு வயது வித்தியாசம் இன்றி அனைவரும் தெருக்களில் இறங்கி ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி மகிழ்வர். 

வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அங்கு எந்த ஆடையை அணிந்து கொண்டு ஹோலி அன்று வெளியே சென்றாலும் நிச்சயம் அந்த ஆடையின் நிறங்கள் மாறிவிடும் என்பது உறுதி. குளிர்காலத்தை வழி அனுப்பி வசந்தத்தை வரவேற்கும் வண்ணமாக ஹோலி பண்டிகை தினம் கொண்டாட்டங்கள் நிறைந்தது. 

Tap to resize

ஹோலி பண்டிகை வரலாறு 

இந்த பண்டிகையின் முதல் தினத்தில் மக்கள் பொது இடத்தில் ஹோலிகா எனும் பூஜையை இணைந்து செய்கின்றனர். கிருஷ்ணன் சிறுவயதில் அருந்திய தாய்ப்பால் விஷமாக மாறி அவருடைய கன்னம் நீல வண்ணமாக மாறிவிட்டது. அப்போது நீல கன்னத்தை ராதையும் மற்ற பெண்களும் வெறுத்துவிடுவார்கள், விரும்பமாட்டார்கள் என நினைத்து வருத்தம் கொண்டாராம். 

தன் மகனின் கவலையை கண்டு மனம் நொந்த யசோதா, கிருஷ்ணனின் மனதை உற்சாகமாக மாற்ற ராதையின் முகத்திலும் வண்ணங்களை பூசி விட்டாராம். அதனால் ஹோலி என்றால் கிருஷ்ணர், ராதையின் காதலின் புனிதத்தை பிரதிபலிக்கும் பண்டிகை எனவும் கூறப்படுகிறது. 

வண்ணங்களுக்கு அர்த்தம்... 

சிவப்பு வண்ணம் அன்பு, கருணை, கருவுறுதல் ஆகியவற்றை குறிப்பதாக சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் புதிய ஆரம்பம், மன்னிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை பிரதிபலிப்பது ஆரஞ்சு வண்ணம். மனதில் உள்ள மகிழ்ச்சி, அமைதி, கொண்டாட்டம், அறிவு, கற்றலின் ஈடுபாடு, தியானம் ஆஆகியவற்றை பிரதிபலிப்பாக மஞ்சள் வண்ணம் உள்ளது. 

இதையும் படிங்க: தினமும் சுடு தண்ணீர் பருகும் பழக்கம் வைத்து கொண்டால்.. காலையில் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

பிங்க் என்றால் கனிவு, கருணை, நல்லெண்ணங்கள் போதனை ஆகியவை குறித்தும். பச்சை வண்ணம் செழுமையான வாழ்க்கையும், இயற்கையையும், அறுவடையும் உணர்த்துகிறது. நீல வானம் பிற வண்ணங்களை விடவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது இது கிருஷ்ண பரமாத்மாவின் நிறத்தை குறிப்பது இதற்கு முக்கிய காரணம். நீல வண்ணம் ஆன்மீகத்தையும் குறிக்கும். மாயாஜாலம், மந்திரங்களின் ஆற்றல் ஆகியவற்றை உணர்த்துவது பர்பிள் வண்ணம். 

ஹோலி அன்று பாங் அருந்துவது ஏன்?

ஹோலி அன்று பாங் குடிக்கும் பாரம்பரியம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. இந்த திருவிழாவின் ஒருங்கிணைந்த பகுதியாக பாங் பானம் உள்ளது. ஆனாலும் பாங்கை அதிகமாக குடிக்கக் கூடாது. இது கஞ்சா செடியின் இலைகள், பூக்களால் ஆனது. இவை அரைக்கப்பட்டு பால், மசாலா மற்றும் இனிப்புகளுடன் கலக்கப்படுகின்றன. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பானமாக கருதப்படுவதால் ஹோலியின் போது பாங் எடுத்து கொள்ளப்படுவதாக நம்பப்படுகிறது. இதில் மருத்துவ நன்மைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: வீட்டில் தெய்வசிலை வழிபாடு செய்யலாமா? எப்படி வழிபட்டால் கடவுள் மனம் குளிர்ந்து.. அருளை அள்ளி கொடுப்பார்..!

Latest Videos

click me!