வீட்டில் தெய்வசிலை வழிபாடு செய்யலாமா? எப்படி வழிபட்டால் கடவுள் மனம் குளிர்ந்து.. அருளை அள்ளி கொடுப்பார்..!

First Published | Mar 7, 2023, 10:13 AM IST

வீட்டில் தெய்வ சிலைகளை வைத்து வழிபட்டால் நல்லது நடக்குமா? என்னென்ன தவறுகளை தவிர்க்க வேண்டும். 

பெரும்பாலான வீடுகளில் பூஜையறையில் இறைவனின் திருவுருவ படங்களை வைத்து வழிபாடு செய்வார்கள். சிலர் மட்டும் தங்கள் வீட்டில் கடவுளின் உருவச் சிலைகளை வைத்து வழிபட்டு வருகிறார்கள். இப்படி நம்முடைய வீடுகளில் கடவுள் சிலைகளை வைத்து வழிபடுவது நல்லதா? எந்த கடவுள்களின் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடலாம்? எப்படி வழிபட்டால் நல்லது என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. 

வீட்டில் வழிபட கூடாது என ஏன் சொல்கிறார்கள்?

கடவுள் சிலைகள் எதுவாக இருந்தாலும், அதாவது அந்த சிலை பளிங்கு கல், கருங்கல், ஸ்படிகம், பஞ்சலோகம் இப்படி எதில் செய்யப்பட்ட சிலையாக இருந்தாலும் ஆராதனைகளையும், அபிஷேகளையும் முறையாக செய்ய வேண்டும். ஆனால் நம்முடைய அன்றாட வேலைகளுக்கிடையே இறைவனுக்கு தொடர்ந்து இந்த வழிபாடுகளை வீட்டில் செய்ய முடியாது என்ற காரணத்தால் தான், வீடுகளில் கடவுள் சிலைகளை வைத்து வழிபடக் கூடாது என பெரியோர் சொல்கின்றனர். 

Tap to resize

எப்படி வழிபட வேண்டும்? 

வீட்டில் வைக்கும் தெய்வ சிலைகள் அரை அடி உயரம் கொண்டிருக்க வேண்டும். வீட்டில் சிலை வைத்து தெய்வத்தை வழிபட தொடங்கிவிட்டால் நாள்தோறும் தவறாமல் கடவுள் சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பால், தயிர், பன்னீர், சந்தனம் ஆகிய பொருட்களால் அனுதினமும் செய்யாவிட்டாலும் வெறும் தண்ணீரால் தினமும் அபிஷேகம் செய்வது அவசியம். இறைவனுக்கு பூஜை செய்து தீப, தூப ஆராதனைகள் காட்ட வேண்டும். உங்களால் தினமும் அபிஷேகம் செய்ய முடியாவிட்டாலும் வாரத்திற்கு ஒரு தடவையாவது நிச்சயம் அபிஷேகம் செய்ய வேண்டும்.

யாருக்கு எப்படி வழிபாடு? 

உங்களுடைய வீட்டில் விநாயகர் சிலையை வைத்திருந்தால் சதுர்த்தி அன்றும், சிவலிங்கம் இருந்தால் சோமவாரம், பிரதோஷம் ஆகிய தினங்களிலும், முருகப்பெருமான் என்றால் சஷ்டி அன்றும் கிருத்திகை திதிகளிலும் கண்டிப்பாக அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். 

தினமும் கடவுளுக்கு முன்பாக தீபம் ஏற்றி விட வேண்டும். அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் நல்ல பலன்களை பெறுவீர்கள். வீட்டில் இருக்கும் கடவுள் சிலை அளவில் சின்னதோ, பெரியதோ அதற்கு நைவேத்தியம் படைக்க வேண்டும். தினமும் பால் அல்லது ஒரு வாழை பழம் அதுவும் இல்லையென்றால் ஏதேனும் ஒரு பழம் அல்லது கற்கண்டு அல்லது பேரிச்சம்பழம் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக கட்டாயம் வைக்க வேண்டும். 

வழிபாட்டு விதிகள் 

கடவுள் சிலைக்கு முன் நைவேத்தியமாக வைத்த பழமோ, கற்கண்டோ, பேரிச்சம்பழமுமோ எதுவாக இருந்தாலும் தொடர்ந்து பல தினங்கள் அதையே வைக்கக்கூடாது. நைவேத்தியமாக எதனை படைத்தாலும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் அல்லது அன்றைய நாள் முடிவதற்கு முன்பாகவே எடுத்து விட வேண்டும். 

இதையும் படிங்க: மறந்தும் உப்பை மட்டும் கடனாக கொடுக்க கூடாதாம்.. மீறினால் வீட்டில் தரித்தரம் தாண்டவம் ஆடும் தெரியுமா?

சுவாமி திருவுருவப்படம் அல்லது உருவ சிலைக்கு அணிவிக்கும் மாலையை அல்லது பூக்களை மறுநாள் அகற்றிவிட்டு புதிய மலர்களை தான் சார்த்த வேண்டும். முந்தைய நாள் அணிவித்த பூக்கள் மறுநாள் காய்ந்து போய் அப்படியே சுவாமி படங்களின் மீது அல்லது பூஜை அறை குப்பைகளுடன் இருப்பது எதிர்மறை சக்தியை ஈர்க்க ஆரம்பிக்கும். வீட்டில் கடவுள் தன்மை குறைவதோடு கஷ்டங்கள் வந்து சேரும். அதனால் திருவுருவப்படத்திற்கும், சிலைக்கும் அணிவிக்கும் பூக்களை மறுநாளே மாற்றி விட வேண்டும்.  

வீட்டு பூஜை அறையில் தெய்வங்களை சிலைகளை வைப்பது தவறில்லை. ஆனால் மேலே சொன்ன வழிபாட்டு முறைகளை பின்பற்றினால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும். 

இதையும் படிங்க: வாழை இலை போட்டு உண்ணும் முன் இலையைச் சுற்றி தண்ணீர் தெளிப்பது ஏன் ? முனிவர்கள் சொன்ன காரணம்..

Latest Videos

click me!