செவ்வாய் கிழமையானது செய்வாய் பகவானுக்கு உரிய சிறப்பான நாளாகும்.மேலும் மங்களகாரகன் என்று போற்றப்படக்கூடியது செவ்வாய் கிரகம். முருகப் பெருமானுக்கும், அம்மனுக்கும் மிகச் சிறந்த நாள் என்றால் அது செவ்வாய்க் கிழமை தான்.
பொதுவாக செவ்வாய்க்கிழமை அன்று எந்த நல்ல காரியங்களை செய்வதற்கோ அல்லது ஆரம்பிப்பதற்கோ உகந்தநாள் இல்லை என்று பலரும் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்தாகும். ஆனால் தெய்வத்திற்கு மிகவும் உகந்த இந்நாளில் செய்யப்படுகின்ற அனைத்து நல்ல காரியங்களும் ஜெயமளிக்கும் என்று நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்திற்கு மங்களன், பூமிகாரகன் என்ற சிறப்பு பெயர்கள் உள்ளன.அதன் பெயரிலேயே மங்களம் உள்ளதால் அந்நாளில் ஆரம்பிக்கும் செயல்கள் சுபமாக நிறைவேறும்.
மேலும் ஒருவருக்கு சொந்த வீடு அமையும் பாக்கியம் வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருத்தல் அவசியம் ஆகிறது.
முருகப்பெருமானையும், செவ்வாயையும் வழிபாடு செய்து செவ்வாயில் மங்களப் பொருட்கள் வாங்கினால் பல மடங்கு பெருகும் .மேலும் அனைத்துச் சிறப்புகளும் நம் வீட்டைத் தேடி வரும் என்று நம்பப்படுகிறது.
இத்தனை சிறப்புகளை உள்ளடக்கிய செவ்வாய் கிழமையான இன்று என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்று இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.