சூரிய பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு அற்புத யோகம்.. சில நாள்களில் இவங்க தலையெழுத்தே மாறப்போகுது..!

First Published | Mar 6, 2023, 1:50 PM IST

Suriya Peyarchi 2023: எதிர் வரும் சூரிய பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு நன்மைகளைத் தரும் என இங்கு காணலாம். 

ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மாறுகிறது. அந்த மாற்றம் மனித வாழ்விலும், பூமியிலும் அதனுடைய தாக்கம் காணப்படுகிறது. இதனால் சிலருக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும். சிலருக்கு எதிர்மறையாகவும் நடக்க வாய்ப்புள்ளது. 

மார்ச் 15ஆம் தேதி அன்று கிரகங்களின் அதிபதியான சூரியன், மீன ராசிக்கு செல்கிறார். மீன ராசியின் அதிபதி வியாழன். ஜோதிடத்தின் படி, சூரியக் கடவுளுக்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையே நட்பு உணர்வு உள்ளது. ஆகவே 3 ராசியினருக்கு இந்தப் பெயர்ச்சியின் சுப பலன்களை வாரி வழங்குகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து பார்ப்போம். 

Tap to resize

மீனம் 

மீன ராசியில் சூரியனின் சஞ்சாரம் செய்வது உங்களுக்கு சாதகமாக இருக்கும். சூரிய பகவான் உங்கள் லக்ன வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். காதல் உறவுகளும் வலுவாக இருக்கும். திருமணமானவர்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்னும் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல உறவு கிடைக்கும். தொழில்முனைவோர் இந்த நேரத்தில் நல்ல லாபத்தை அடைவார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். பார்ட்னர்ஷிப்பில் நல்ல வெற்றியை அடையலாம். ஜனவரி முதல் சனியின் பாதிப்பும் உங்கள் மீது தொடங்கியுள்ளது. சற்று கவனமாகவும் இருக்க வேண்டும். 

தனுசு 

சூரிய பகவானின் ராசி மாறுவது தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் எல்லா வசதிகளையும் நீங்கள் பெற முடியும். வாகனங்கள், சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். தாயுடனான உறவு பலம் ஆகும். ரியல் எஸ்டேட், உணவு ஆகியவை தொடர்பான வணிகத்தில் உள்ளவர்களுக்கு இந்த நேரம் நன்றாக உள்ளது. 

விருச்சிகம் 

சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நிதி ரீதியாக சாதகமான சூழலை ஏற்படுத்தும். சூரிய பகவான் உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் சஞ்சரித்து வருகிறார். இது உங்களுடைய சந்ததி விருத்தியை ஏற்படுத்தும். காதல் திருமணம் கைகூடலாம். இந்த நேரத்தில் நீங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் குழந்தை முன்னேற வாய்ப்புள்ளது. காதல் விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். இதனுடன் எதிர்பாராத விதமாக உங்களுக்கு பணம் கிடைக்கும். 

இதையும் படிங்க: சனியிடம் இருந்து விடுவிக்கும் நீலக்கல்... இந்த 4 ராசியினர் அதை அணிந்தால் செம்ம அதிர்ஷ்டம் கிடைக்குமாம்..

இதையும் படிங்க: மாசி மகம் பௌர்ணமி பூஜை.. இப்படி வழிபட்டால் செல்வம் அருளி உங்க பரம்பரையை அம்பாள் தழைக்க செய்வாள்..!

Latest Videos

click me!