மஞ்சள்,குங்குமம்:
நெற்றியில் வைத்து கொள்ளக் கூடிய மஞ்சள்,குங்குமானது, ஒரு போதும் சுத்தமாக காலி ஆகக் கூடாது. குறிப்பாக உங்கள் வீட்டில் சுமங்கலி பெண்கள் வருகிறார்கள். அவர்களுக்கு குங்குமம் கொடுக்க சொல்லுகையில், வீட்டில் இருக்கும் பெண், குங்குமம் இல்லை என்ற வார்த்தையை பயன் படுத்தவே கூடாது. இதுவும் உங்களுக்கு கஷ்டம் தரக்கூடிய ஒரு அறிகுறி.ஆகையால் மஞ்சள்,குங்குமம் எப்போதும் காலி ஆவதற்கு முன்பே மற்றொன்றே வாங்கி வைத்துக் கொள்ளுதல் நன்றாகும்