சனியிடம் இருந்து விடுவிக்கும் நீலக்கல்... இந்த 4 ராசியினர் அதை அணிந்தால் செம்ம அதிர்ஷ்டம் கிடைக்குமாம்..

First Published | Mar 6, 2023, 11:20 AM IST

நீலக்கல் அணிவதால் ஏற்படும் நன்மைகளையும், அணியும் முறையையும் இங்கு முழுமையாக தெரிந்து கொள்வோம். 

ரத்னசாஸ்திரத்தில் 9 ரத்தினங்கள், 84 துணைக் கற்கள் குறித்து விளக்கம் காணப்படுகிறது. கர்மவினை, நீதியை கொடுக்கும் சனி பகவானுடன் தொடர்புடையதாக நீலக்கல் நம்பப்படுகிறது. உங்களால் புஷ்பராக கல் வாங்க முடியாது எனில், நீலக்கல் அணிந்து கொள்ளலாம். எந்த ராசிக்காரர்களுக்கு நீலக்கல் சுபமானது, அதை எப்படி அணிய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். 

நீலக்கல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் 

ரத்ன சாஸ்திரத்தின்படி, ஒருவருக்கு நீலக்கல் சரியாக இருந்தால், அந்த நபருக்கு நிதி நன்மைகள் சாதகமாக இருக்கும். வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிலைத்தன்மை இல்லாதவர்கள், அதாவது பொறுமை இல்லாதவர்கள், நீலக்கல் அணிவது அவர்களின் வாழ்க்கையில் அமைதியைக் கொண்டுவருகிறது. அதை அணிந்த பிறகு அவர்களால் சிறந்த முடிவுகளை எடுக்க முடிகிறது. 

Tap to resize

ஒருவருக்கு செய்வினை, பில்லி சூனியம் அல்லது கெட்ட சக்திகள் ஆக்கிரமிப்பு இருந்தால்நீலக்கல் அணிவது நன்மை பயக்கும். ஜோதிடத்தின் படி, நீலக்கல் சூட்டில் பாதிப்படையாமல் அணியும் போது அதிகபட்ச நன்மைகளைப் பெறலாம். நிதி பிரச்சனைகளிலிருந்து மீள முடியும். 

யார் அணியலாம்? 

ரத்ன சாஸ்திரப்படி, ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசியினர் ஜாதகத்தில் சனி அசுபமாக இருந்தால் நீலக்கல் அணிவதும் தீங்கு விளைவிக்கும். மாறாக அவர்களுக்கு சனி கேந்திர அதிபதியாக இருந்தால் நீலக்கல் அணியலாம். சனி சாதகமான ஜாதகத்தில் அமைந்திருந்தால், நீல நிறத்தை அணியலாம். இருப்பினும் ரூபி, பவளம் கொண்ட நீலக்கல் அணிய வேண்டாம். 

இதையும் படிங்க: உங்க வீட்டுக்கு வர பிரச்சனையை மணிபிளான்ட் வெச்சே ஈஸியா கண்டுபிடிக்கலாம்.. எப்படி-ன்னு பாத்து உஷாரா இருங்க..!

எப்படி அணிய வேண்டும்? 

பஞ்சதத்து அல்லது வெள்ளியுடன் நீல ரத்தினத்தை அணியலாம். இதற்கு தங்கத்தைப் பயன்படுத்துவது கூடவே கூடாது. இது நீலக்கல்லின் நேர்மறையான விளைவுகளையே முற்றிலும் சொதப்பிவிடும். இந்த மங்களகரமான ரத்தினத்தை சனிக்கிழமைகளில் வலது அல்லது இடது கையின் நடுவிரலில் அணிந்து கொள்ள வேண்டும். இந்த ரத்தினக் கல்லை அணிவதற்கு முன், கல்லை ஒரு கிண்ண பாலில் சுமார் ஒரு மணி நேரம் போட்டு வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு ரோஸ் வாட்டரில் போட வேண்டும். அதை அணிந்த பிறகு, சனி தொடர்பான சில தானங்களை கோவில் பூசாரிக்கு கொடுக்கவும். வாழ்க்கை மாறும். 

இதையும் படிங்க: மாசி மகம் பௌர்ணமி பூஜை.. இப்படி வழிபட்டால் செல்வம் அருளி உங்க பரம்பரையை அம்பாள் தழைக்க செய்வாள்..!

Latest Videos

click me!