எல்லா தமிழ் மாதத்திற்கும் ஏதேனும் ஒரு நட்சத்திரம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்த தினத்தில் ஏற்ற தெய்வத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தால் மனமும் வாழ்வும் நிம்மதி பெறும். பௌர்ணமி சிறப்பான நாளாக இருந்தாலும், ரொம்ப மகிமை வாய்ந்ததாக கருதப்படுவது மாசியில் வரும் மகம் நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி தான். பௌர்ணமியின் சிறப்பு அதன் வழிபாடுகளின் சிறப்புகளை இங்கு காணலாம்.
மாசி மகம் பௌர்ணமி எப்போது?
இந்தாண்டில் மாசி மகம் மார்ச் 6ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. மகம் நட்சத்திரம் நேற்றிரவு 9.30 மணிக்கு தொடங்கி மார்ச் 7ஆம் தேதி நள்ளிரவு 12.05 மணிக்கு முடிவடையும். இதற்கிடையே இன்று (மார்ச் 6) மாலை 5.39 மணி முதல் மார்ச் 7ஆம் தேதி இரவு 7.14 மணி வரை பௌர்ணமி திதிக்கான நேரம் வருகிறது. இந்த இரண்டு தினங்களும் மார்ச் 6 ஆம் தேதி இணைந்து இருப்பதால் தான் இன்று மாசி மகமாக கொண்டாடப்படுகிறது.
மாசி மகம் பௌர்ணமி...
மாசி மகம் நாளில் வரும் பௌர்ணமி தினத்தன்று சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயங்களில் விஷேச அலங்காரங்கள், அபிஷேகம், பிரார்த்தனை, யாகங்கள் போன்றவை வெகுவிமரிசையாக நடைபெறும். அன்றைய நாளில் விரதம் இருந்து கோயில் பூஜையில் பங்கேற்று பலன்களை பெறுங்கள்.
பௌர்ணமி விரத பலன்கள்..
பௌர்ணமி தினத்தன்று பெண்கள் விரதம் இருப்பது உகந்தது. அன்றைய நாளில் குல தெய்வத்தை வழிபாடு செய்யும்போது உங்களுக்கு மட்டுமின்றி உங்களுடைய வருங்கால சந்ததியினருக்கும் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். பௌர்ணமி அன்று குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே குலதெய்வத்தின் திருவுருவப்படத்தை வைத்து வழிபடலாம். குலதெய்வ படத்திற்கு மாலை அணிவித்து, தீபம் ஏற்றி பிரசாதம் படையல் செய்து வழிபாடு செய்யலாம்.
இதையும் படிங்க: இன்று மாசி மகம்... இந்த நன்னாளில் இந்த ஒரு விஷயத்தை தவறாமல் செய்தால்.. முடிவில்லா நன்மைகள் கிடைக்கும்!