மனித வாழ்வில் பிரச்சனை இல்லாத மனிதர்கள் என்று எவரையும் கூற இயலாது. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கும்.அதனை எப்படி எதிர்கொள்வது அல்லது சரி செய்வது ?
ஒரு சிலருக்கு படிப்பில் பிரச்சனை, சிலருக்கு வேலை கிடைப்பதில் பிரச்சனை ,வேலையில் உள்ளவர்களுக்கு அதிக வேலை பளுவால் பிரச்சனை ,ஊதிய பிரச்சனை அல்லது உயர் அதிகாரிகளால் பிரச்சனை, சிலருக்கு திருமண தடை, திருமணமானவர்களுக்கு குழந்தை பெறுவதில் பிரச்சனை, சிலர் உடல் பருமனால் பல பிரச்னைகளை சந்திப்பார்கள். மேலும் சிலருக்கு தீராத நோய்களால் அன்றாடம் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்
இப்படி ஒவ்வொரு மனிதனும் பல்வேறு விதங்களில் ஏதோ ஒரு பிரச்சனைகளுடன் தான் அவர்களுடைய வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள். இந்த பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் பலரும் தவித்து வருகிறார்கள். இந்த பிரச்னைகளுக்கெல்லாம் ஒரு முடிவு எப்போது கிடைக்கும் என்று பலரும் ஏங்கி இருப்பார்கள். அவர்களுக்கான பதிவு தான் இது.